அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 747

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُكْثِرُ أَنْ يَقُولَ قَبْلَ أَنْ يَمُوتَ ‏ ‏سُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْكَلِمَاتُ الَّتِي أَرَاكَ أَحْدَثْتَهَا تَقُولُهَا قَالَ جُعِلَتْ لِي عَلَامَةٌ فِي أُمَّتِي إِذَا رَأَيْتُهَا قُلْتُهَا ‏ ‏إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ‏إِلَى آخِرِ السُّورَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறப்பதற்கு முன்னர், “ஸுப்ஹானக, வபி ஹம்திக, அஸ்தஃக்ஃபிருக, வ அதூபு இலைக்க. (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன். உன்னிடத்தில் பாவமன்னிப்புக்கோரி உன்னிடமே மீளுகின்றேன்)” என்று அதிகமாகக் கூறிவந்தார்கள். (ஒரு நாள்) நான், “அல்லாஹ்வின் தூதரே! புதிதாக இந்தச் சொற்களைக் கூறுபவராக நான் உங்களைக் காண்கிறேன். அதன் காரணம் யாது?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது (என்று தொடங்கும் 110ஆவது) அத்தியாயத்தில் என் சமுதாயத்தார் விஷயத்தில் எனக்கோர் அடையாளம் கூறப்பட்டுள்ளது. அதை நான் காண்பதால் இவற்றைக் கூறிவருகின்றேன்” எனச் சொல்லி, அந்த அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith:

Leave a Comment