அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 777

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏

أَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏وَهُوَ ‏ ‏بِالْأَبْطَحِ ‏ ‏فِي ‏ ‏قُبَّةٍ ‏ ‏لَهُ حَمْرَاءَ مِنْ ‏ ‏أَدَمٍ ‏ ‏قَالَ فَخَرَجَ ‏ ‏بِلَالٌ ‏ ‏بِوَضُوئِهِ فَمِنْ نَائِلٍ ‏ ‏وَنَاضِحٍ ‏ ‏قَالَ فَخَرَجَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ سَاقَيْهِ قَالَ فَتَوَضَّأَ وَأَذَّنَ ‏ ‏بِلَالٌ ‏ ‏قَالَ فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا يَقُولُ يَمِينًا وَشِمَالًا يَقُولُ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ ثُمَّ رُكِزَتْ لَهُ ‏ ‏عَنَزَةٌ ‏ ‏فَتَقَدَّمَ فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْحِمَارُ وَالْكَلْبُ لَا يُمْنَعُ ثُمَّ صَلَّى الْعَصْرَ رَكْعَتَيْنِ ثُمَّ لَمْ يَزَلْ ‏ ‏يُصَلِّي رَكْعَتَيْنِ حَتَّى رَجَعَ إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏

நபி (ஸல்) (ஹஜ்ஜின்போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள ’அப்தஹ்’ எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரத்தில் இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் உளூச் செய்தார்கள். பிலால் (ரலி) (உள்ளே சென்று) நபி (ஸல்) உளூச் செய்த தண்ணீரின் மிச்சத்தை வெளியே கொண்டு வந்தார்கள். மக்களில் சிலர் அதை (பிலால் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகப்) பெற்றுக் கொண்டனர். மற்றச் சிலர் அதைப் பெற்றவர்களிடமிருந்து பெற்று(த் தம்மீது தடவிக்) கெண்டனர். பிறகு நபி (ஸல்) சிவப்பு நிற அங்கி அணிந்தவர்களாக வெளியே வந்தார்கள். (அதை அவர்கள் உயர்த்திப் பிடித்துக் கொண்டு வந்ததால் அவர்களின் கால்கள் வெளியில் தெரிந்தன) இப்போதும் நான் நபி (ஸல்) அவர்களுடைய கால்களின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. பிறகு பிலால் (ரலி) பாங்கு சொன்னார்கள். அவர்கள், “ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்” என்று கூறும்போது இங்கும் அங்குமாக – அதாவது வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் – திரும்பியபோது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிந்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களுக்காக (பிடி உள்ள) கைத்தடி ஒன்று (தடுப்பாக) நட்டுவைக்கப்பட்டது. நபி (ஸல்) முன்னே சென்று லுஹ்ருத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அவர்களுக்கு முன்னால் (அந்தக் கைத்தடிக்கு அப்பால்) கழுதை, நாய் ஆகியன தடையின்றி கடந்து சென்று கொண்டிருந்தன. பிறகு நபி (ஸல்) அஸ்ரையும் இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். பின்னர் மதீனாவிற்குத் திரும்பிச் செல்லும்வரை (கடமையான நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுவித்துக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஜுஹைஃபா வஹ்பு பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment