அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 781

حَدَّثَنَا ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏أَخْبَرَهُ ‏

أَنَّهُ أَقْبَلَ يَسِيرُ عَلَى حِمَارٍ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَائِمٌ ‏ ‏يُصَلِّي ‏ ‏بِمِنًى ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ قَالَ فَسَارَ الْحِمَارُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ ثُمَّ نَزَلَ عَنْهُ فَصَفَّ مَعَ النَّاسِ

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي ‏ ‏بِعَرَفَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فِيهِ ‏ ‏مِنًى ‏ ‏وَلَا ‏ ‏عَرَفَةَ ‏ ‏وَقَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ أَوْ يَوْمَ الْفَتْحِ ‏

விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் மக்களுக்குத் தொழுவித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். அப்போது கழுதையொன்றில் பயணித்தவாறு நான் அவர்களை நோக்கிச் சென்றேன். (எனது) கழுதை தொழுது கொண்டிருந்தவர்களின் வரிசையினூடே நடந்துசென்றது. பிறகு நான் அதிலிருந்து இறங்கி மக்களுடன் வரிசையில் சேர்ந்துகொண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

இபுனு உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில், “… நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் (மக்களுக்குத்) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள்” என்று இடப் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது.

மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், மினா, அரஃபா போன்ற இடப்பெயர் குறிப்பு ஏதும் இடம் பெறவில்லை. “விடைபெறும் ஹஜ்ஜின் போது”, “மக்கா வெற்றி நாளில்” என்று (பொதுவாக) இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 780

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

أَقْبَلْتُ رَاكِبًا عَلَى ‏ ‏أَتَانٍ ‏ ‏وَأَنَا يَوْمَئِذٍ قَدْ ‏ ‏نَاهَزْتُ ‏ ‏الِاحْتِلَامَ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ ‏ ‏بِمِنًى ‏ ‏فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ الصَّفِّ فَنَزَلْتُ فَأَرْسَلْتُ ‏ ‏الْأَتَانَ ‏ ‏تَرْتَعُ ‏ ‏وَدَخَلْتُ فِي الصَّفِّ فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின் போது) மினாவில் (தடுப்பு எதையும் முன்னோக்காமல்) மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன். அந்த நாளில் நான் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தேன். (தொழுது கொண்டிருந்தவர்களின்) அணிக்கு முன்னால் நான் கடந்து சென்று (கழுதையிலிருந்து) இறங்கி அதை மேயவிட்டுவிட்டுத் தொழுகை அணியினூடே நுழைந்து (நின்று) கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்து சென்ற)தற்காக என்னை யாரும் ஆட்சேபிக்கவில்லை.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 779

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا جُحَيْفَةَ ‏ ‏قَالَ ‏

خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْهَاجِرَةِ ‏ ‏إِلَى ‏ ‏الْبَطْحَاءِ ‏ ‏فَتَوَضَّأَ فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ وَبَيْنَ يَدَيْهِ ‏ ‏عَنَزَةٌ ‏

قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏وَزَادَ فِيهِ ‏ ‏عَوْنٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَبِي جُحَيْفَةَ ‏ ‏وَكَانَ يَمُرُّ مِنْ وَرَائِهَا الْمَرْأَةُ وَالْحِمَارُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِالْإِسْنَادَيْنِ جَمِيعًا مِثْلَهُ ‏ ‏وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏الْحَكَمِ ‏ ‏فَجَعَلَ النَّاسُ يَأْخُذُونَ مِنْ فَضْلِ وَضُوئِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது ஒரு நாள்) நண்பகல் நேரத்தில் பத்ஹா வெளியை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் உளூச் செய்துவிட்டு லுஹ்ருத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவித்து அஸ்ருத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் கைத்தடி ஒன்று (நடப்பட்டு) இருந்தது.

அறிவிப்பாளர் : அபூஜுஹைஃபா வஹ்பு பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி)

குறிப்பு :

ஷுஃபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அந்தக் கைத்தடிக்கு அப்பால் பெண்கள் மற்றும் கழுதைகள் (உள்ளிட்ட கால் நடைகள்) கடந்து சென்று கொண்டிருந்தன” எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

ஹகம் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரின் மிச்சத்தைப் பெற்றுக்கொள்ள மக்கள் போட்டி போட்டனர்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 778

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ ‏

أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏رَأَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏قُبَّةٍ ‏ ‏حَمْرَاءَ مِنْ ‏ ‏أَدَمٍ ‏ ‏وَرَأَيْتُ ‏ ‏بِلَالًا ‏ ‏أَخْرَجَ وَضُوءًا فَرَأَيْتُ النَّاسَ ‏ ‏يَبْتَدِرُونَ ‏ ‏ذَلِكَ الْوَضُوءَ فَمَنْ أَصَابَ مِنْهُ شَيْئًا تَمَسَّحَ بِهِ وَمَنْ لَمْ يُصِبْ مِنْهُ أَخَذَ مِنْ بَلَلِ يَدِ صَاحِبِهِ ثُمَّ رَأَيْتُ ‏ ‏بِلَالًا ‏ ‏أَخْرَجَ ‏ ‏عَنَزَةً ‏ ‏فَرَكَزَهَا وَخَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حُلَّةٍ حَمْرَاءَ مُشَمِّرًا فَصَلَّى إِلَى ‏ ‏الْعَنَزَةِ ‏ ‏بِالنَّاسِ رَكْعَتَيْنِ وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ بَيْنَ يَدَيْ ‏ ‏الْعَنَزَةِ ‏

حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ عَوْنٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عُمَيْسٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏مَالِكُ بْنُ مِغْوَلٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِ حَدِيثِ ‏ ‏سُفْيَانَ ‏ ‏وَعُمَرَ بْنِ أَبِي زَائِدَةَ ‏ ‏يَزِيدُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏مَالِكِ بْنِ مِغْوَلٍ ‏ ‏فَلَمَّا كَانَ ‏ ‏بِالْهَاجِرَةِ ‏ ‏خَرَجَ ‏ ‏بِلَالٌ ‏ ‏فَنَادَى بِالصَّلَاةِ ‏

நான் (ஹஜ்ஜின் போது) தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். பிலால் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்து) மிச்சம் வைத்த தண்ணீரை வெளியே எடுத்து வருவதையும் பார்த்தேன். அந்த மிச்சத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக் கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர் அதைத் (தம் மேனியில்) தடவிக் கொண்டார். அதில் சிறிதும் கிடைக்காதவர் (தண்ணீர் கிடைத்த) தம் தோழரின் கையிலுள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவிக்) கொண்டார். பிறகு பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து வந்து நட்டுவைப்பதை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிவப்பு நிற அங்கியொன்றை அணிந்தவர்களாக (தம் கணைக்கால்கள் தெரியுமளவுக்கு அங்கியை) உயர்த்திப் பிடித்தபடி வெளியில் வந்தார்கள். பிறகு அந்தக் கைத்தடி எதிரில் நின்று மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் கால்நடைகளும் கடந்து செல்வதை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அபூஜுஹைஃபா வஹ்பு பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி)

குறிப்பு :

மாலிக் பின் மிஃக்வல் (ரஹ்) வழி அறிவிப்பில், “நண்பகல் நேரமானபோது பிலால் (ரலி) வந்து தொழுகைக்கான அழைப்புக் கொடுத்தார்கள்” எனும் கூடுதல் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 777

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

أَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏وَهُوَ ‏ ‏بِالْأَبْطَحِ ‏ ‏فِي ‏ ‏قُبَّةٍ ‏ ‏لَهُ حَمْرَاءَ مِنْ ‏ ‏أَدَمٍ ‏ ‏قَالَ فَخَرَجَ ‏ ‏بِلَالٌ ‏ ‏بِوَضُوئِهِ فَمِنْ نَائِلٍ ‏ ‏وَنَاضِحٍ ‏ ‏قَالَ فَخَرَجَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ سَاقَيْهِ قَالَ فَتَوَضَّأَ وَأَذَّنَ ‏ ‏بِلَالٌ ‏ ‏قَالَ فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا يَقُولُ يَمِينًا وَشِمَالًا يَقُولُ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ ثُمَّ رُكِزَتْ لَهُ ‏ ‏عَنَزَةٌ ‏ ‏فَتَقَدَّمَ فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْحِمَارُ وَالْكَلْبُ لَا يُمْنَعُ ثُمَّ صَلَّى الْعَصْرَ رَكْعَتَيْنِ ثُمَّ لَمْ يَزَلْ ‏ ‏يُصَلِّي رَكْعَتَيْنِ حَتَّى رَجَعَ إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரத்தில் இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் உளூச் செய்தார்கள். பிலால் (ரலி) அவர்கள் (உள்ளே சென்று) நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரின் மிச்சத்தை வெளியே கொண்டு வந்தார்கள். மக்களில் சிலர் அதை (பிலால் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகப்) பெற்றுக் கொண்டனர். மற்றச் சிலர் அதைப் பெற்றவர்களிடமிருந்து பெற்று(த் தம்மீது தடவிக்) கெண்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்தவர்களாக வெளியே வந்தார்கள். (அதை அவர்கள் உயர்த்திப் பிடித்துக் கொண்டு வந்ததால் அவர்களின் கால்கள் வெளியில் தெரிந்தன) இப்போதும் நான் நபி (ஸல்) அவர்களுடைய கால்களின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. பிறகு பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள், “ஹய்ய அலஸ் ஸலாஹ் ஹய்ய அலல் ஃபலாஹ்” என்று கூறும்போது இங்கும் அங்குமாக – அதாவது வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் – திரும்பியபோது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிந்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களுக்காக (பிடி உள்ள) கைத்தடி ஒன்று (தடுப்பாக) நட்டுவைக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று லுஹ்ருத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அவர்களுக்கு முன்னால் (அந்தக் கைத்தடிக்கு அப்பால்) கழுதை, நாய் ஆகியன தடையின்றி கடந்து சென்று கொண்டிருந்தன. பிறகு நபி (ஸல்) அவர்கள் அஸ்ரையும் இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். பின்னர் மதீனாவிற்குத் திரும்பிச் செல்லும்வரை (கடமையான நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுவித்துக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் :
அபூஜுஹைஃபா வஹ்பு பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 776

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي إِلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏

و قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى إِلَى بَعِيرٍ ‏

நபி(ஸல்) அவர்கள் தமது வாகன (ஒட்டக)த்துக்கு எதிரில் நின்று தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

குறிப்பு :

இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் எதிரில் தொழுதார்கள்” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 775

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَعْرِضُ ‏ ‏رَاحِلَتَهُ ‏ ‏وَهُوَ ‏ ‏يُصَلِّي إِلَيْهَا ‏

நபி (ஸல்) அவர்கள் (திறந்த வெளியில் தொழும்போது) தமது வாகன (ஒட்டக)த்தைக் குறுக்கே (தடுப்பாக) வைத்து அதன் எதிரில் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 774

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَرْكُزُ وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏يَغْرِزُ ‏ ‏الْعَنَزَةَ ‏ ‏وَيُصَلِّي إِلَيْهَا ‏

زَادَ ‏ ‏ابْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏وَهِيَ الْحَرْبَةُ ‏

நபி(ஸல்) அவர்கள் (கைப்பிடி உள்ள) கைத்தடியை நட்டுவைத்து அதை நோக்கித் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அது (முனை அகலமான) ஈட்டியாகும்” என்று உபைதுல்லாஹ் பின் ஹஃப்ஸ் (ரஹ்) கூறினார்கள் என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 773

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ أَمَرَ بِالْحَرْبَةِ فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ وَرَاءَهُ وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الْأُمَرَاءُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று (தொழுவிப்பதற்காகத் தொழுகைத் திடலுக்குப்) புறப்படும்போது (முனை அகலமான) ஈட்டியை எடுத்து வருமாறு உத்தரவிடுவார்கள். (தொழுகைத் திடலில்) அவர்களுக்கு முன்னால் அந்த ஈட்டி (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதன் எதிரில் நின்று தொழுவிப்பார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள். பொதுவாகப் பயணத்திலும் இவ்வாறே செய்வார்கள். இதனால்தான் (நம்) தலைவர்களும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 772

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَيْوَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَسْوَدِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سُئِلَ فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏تَبُوكَ ‏ ‏عَنْ سُتْرَةِ الْمُصَلِّي فَقَالَ ‏ ‏كَمُؤْخِرَةِ ‏ ‏الرَّحْلِ ‏

தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு வைத்துக் கொள்வது பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் “வாகன (ஒட்டக)த்தின் சேணப்பலகை போன்ற ஒன்றை (தடுப்பாக) வைத்துக் கொள்ளுமாறு” கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)