حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرٌو أَنَّ أَبَا الزُّبَيْرِ الْمَكِّيَّ حَدَّثَهُ :
أَنَّهُ رَأَى جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُصَلِّي فِي ثَوْبٍ مُتَوَشِّحًا بِهِ وَعِنْدَهُ ثِيَابُهُ وَقَالَ جَابِرٌ إِنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ ذَلِكَ
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பல ஆடைகளிருந்தன. இருப்பினும் அவர் ஒரே ஆடையை அணிந்து (அதன் இரு முனைகளையும்) மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன். “இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுததை நான் பார்த்திருக்கிறேன்” என்று ஜாபிர் (ரலி) குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் அல்மக்கீ (ரஹ்)