அத்தியாயம்: 4, பாடம்: 52, ஹதீஸ் எண்: 807

حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَمْرٍو ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ :‏ ‏

‏أَنَّهُ دَخَلَ عَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَرَأَيْتُهُ ‏ ‏يُصَلِّي عَلَى حَصِيرٍ يَسْجُدُ عَلَيْهِ قَالَ وَرَأَيْتُهُ ‏ ‏يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ ‏ ‏مُتَوَشِّحًا ‏ ‏بِهِ ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي كُرَيْبٍ ‏ ‏وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ ‏ ‏وَرِوَايَةُ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَسُوَيْدٍ ‏ ‏مُتَوَشِّحًا ‏ ‏بِهِ

நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் ஒரு பாயில் ஸஜ்தாச் செய்து தொழுது கொண்டிருந்ததையும் ஒரே ஆடையை அணிந்து, மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுததையும் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “… அதன் இரு முனைகளையும் தம் தோள்கள்மீது போட்டுக் கொண்டு (தொழுததை நான் பார்த்தேன்)” என்ற விளக்கம் இடம்பெற்றுள்ளது.

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்), ஸுவைத் பின் ஸயீத் (ரஹ்) ஆகிய இருவரது அறிவிப்பிலும், “(அதன் இரு முனைகளையும்) மாற்றிப் போட்டுக் கொண்டு …” எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 52, ஹதீஸ் எண்: 806

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا الزُّبَيْرِ الْمَكِّيَّ ‏ ‏حَدَّثَهُ ‏ ‏:‏

أَنَّهُ رَأَى ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يُصَلِّي فِي ثَوْبٍ ‏ ‏مُتَوَشِّحًا ‏ ‏بِهِ وَعِنْدَهُ ثِيَابُهُ ‏وَقَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏إِنَّهُ ‏ ‏رَأَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْنَعُ ذَلِكَ

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பல ஆடைகளிருந்தன. இருப்பினும் அவர் ஒரே ஆடையை அணிந்து (அதன் இரு முனைகளையும்) மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன். “இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுததை நான் பார்த்திருக்கிறேன்” என்று ஜாபிர் (ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் அல்மக்கீ (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 52, ஹதீஸ் எண்: 805

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ :‏ ‏

رَأَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ ‏ ‏مُتَوَشِّحًا ‏ ‏بِهِ ‏


حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏جَمِيعًا بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏قَالَ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

நபி (ஸல்) ஒரே ஆடையை(த் தம் தோள்களின்மீது) மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது …” என்று ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம்: 4, பாடம்: 52, ஹதீஸ் எண்: 804

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعِيسَى بْنُ حَمَّادٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ ‏ ‏قَالَ :‏‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُلْتَحِفًا مُخَالِفًا بَيْنَ طَرَفَيْهِ ‏


زَادَ ‏ ‏عِيسَى بْنُ حَمَّادٍ ‏ ‏فِي رِوَايَتِهِ قَالَ عَلَى مَنْكِبَيْهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரே ஆடையை போர்த்திக் கொண்டு அதன் இரு முனைகளையும் மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : உமர் பின் அபூஸலமா (ரலி)


குறிப்பு :

ஈஸா பின் ஹம்மாத் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம் தோள்கள் மீது (மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுதார்கள்)” எனும் விளக்கம் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 52, ஹதீஸ் எண்: 803

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ ‏ ‏قَالَ :‏ ‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي فِي بَيْتِ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏فِي ثَوْبٍ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உம்முஸலமா (ரலி) அவர்களது இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழுததை நான் பார்த்தேன். அப்போது அதன் இரு முனைகளையும் அவர்கள் (தம் தோள்களில்) மாற்றிப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : உமர் பின் அபூஸலமா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 52, ஹதீஸ் எண்: 802

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ ‏ ‏أَخْبَرَهُ قَالَ :‏ ‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ ‏ ‏مُشْتَمِلًا ‏ ‏بِهِ فِي بَيْتِ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ ‏


حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏مُتَوَشِّحًا ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏مُشْتَمِلًا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உம்முஸலமா (ரலி) அவர்களது இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுததை நான் பார்த்தேன். அந்த ஆடையின் இரு முனைகளைத் தம் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : உமர் பின் அபூஸலமா (ரலி)


குறிப்பு :

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) வழி அறிவிப்பில், ஒரு நீண்ட ஆடையின் இரு முனைகளை மார்பின் குறுக்காக இரு தோள்களின்மீது போட்டுக் கொள்வதற்கான அரபுச்சொல், “முஷ்தமிலன்” என்பது “முதவஷ்ஷிஹன்” என இடம்பெற்றுள்ளது. அது, ஒருபொருள் இருசொல் வகையைச் சேர்ந்ததாகும்.

அத்தியாயம்: 4, பாடம்: 52, ஹதீஸ் எண்: 801

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا ‏ ‏يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقَيْهِ مِنْهُ شَيْءٌ ‏

“உங்களில் ஒருவர், ஒரே ஆடையை அணிந்துகொண்டு (தொழும்போது) தம் தோள்களை மறைக்காமல் தொழ வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 52, ஹதீஸ் எண்: 800

حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

نَادَى رَجُلٌ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُصَلِّي أَحَدُنَا فِي ثَوْبٍ وَاحِدٍ فَقَالَ ‏ ‏أَوَ كُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ ‏

ஒருவர், நபி (ஸல்) அவர்களை அழைத்து, “எங்களில் ஒருவர் ஒரே ஆடையை அணிந்து தொழலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “நீங்கள் எல்லாரும் இரு ஆடைகள் உள்ளவரோ?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 52, ஹதீஸ் எண்: 799

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

أَنَّ ‏ ‏سَائِلًا ‏ ‏سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ فَقَالَ ‏ ‏أَوَلِكُلِّكُمْ ثَوْبَانِ ‏


حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவது குறித்து ஒருவர் கேட்டார். அதற்கு, “உங்களில் எல்லாருக்கும் இரண்டு ஆடைகள் உள்ளனவா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)