அத்தியாயம்: 42, பாடம்: 0.1, ஹதீஸ் எண்: 4185

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، – وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ – حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ قَالَ :‏

كُنْتُ أَرَى الرُّؤْيَا أُعْرَى مِنْهَا غَيْرَ أَنِّي لاَ أُزَمَّلُ حَتَّى لَقِيتُ أَبَا قَتَادَةَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ الرُّؤْيَا مِنَ اللَّهِ وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا حَلَمَ أَحَدُكُمْ حُلْمًا يَكْرَهُهُ فَلْيَنْفُثْ عَنْ يَسَارِهِ ثَلاَثًا وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ ‏”‏


وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى آلِ طَلْحَةَ وَعَبْدِ رَبِّهِ وَيَحْيَى ابْنَىْ سَعِيدٍ وَمُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي قَتَادَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ مِثْلَهُ وَلَمْ يَذْكُرْ فِي حَدِيثِهِمْ قَوْلَ أَبِي سَلَمَةَ كُنْتُ أَرَى الرُّؤْيَا أُعْرَى مِنْهَا غَيْرَ أَنِّي لاَ أُزَمَّلُ ‏.‏

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَلَيْسَ فِي حَدِيثِهِمَا أُعْرَى مِنْهَا ‏.‏ وَزَادَ فِي حَدِيثِ يُونُسَ ‏ “‏ فَلْيَبْصُقْ عَلَى يَسَارِهِ حِينَ يَهُبُّ مِنْ نَوْمِهِ ثَلاَثَ مَرَّاتٍ ‏”‏

நான் (உறக்கத்தில்) பல கனவுகளைக் கண்டுவந்தேன். அதனால் எனக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. இருந்தாலும், அதற்காக நான் போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கவில்லை.

இறுதியில் (ஒரு நாள்) நான் அபூகத்தாதா (ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் அதைப் பற்றித் தெரிவித்தேன். அப்போது அபூகத்தாதா (ரலி), “நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் ஒருவர் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; அதிலிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் அவர் பாதுகாப்புக் கோரட்டும். (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)


குறிப்புகள் :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் பல கனவுகளைக் கண்டுவந்தேன். அதனால் எனக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. இருந்தாலும், அதற்காக நான் போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கவில்லை” என்று அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் கூறிய குறிப்பு இடம்பெறவில்லை.

யூனுஸ் (ரஹ்), மஅமர் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், “அதனால் எனக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது” எனும் குறிப்பு இல்லை. யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்” என்பது இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment