حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، – يَعْنِي ابْنَ بِلاَلٍ – عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يَقُولُ :
سَمِعْتُ أَبَا قَتَادَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “ الرُّؤْيَا مِنَ اللَّهِ وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا رَأَى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَنْفِثْ عَنْ يَسَارِهِ ثَلاَثَ مَرَّاتٍ وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ ” . فَقَالَ إِنْ كُنْتُ لأَرَى الرُّؤْيَا أَثْقَلَ عَلَىَّ مِنْ جَبَلٍ فَمَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ بِهَذَا الْحَدِيثِ فَمَا أُبَالِيهَا
وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ يَعْنِي الثَّقَفِيَّ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، كُلُّهُمْ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِ الثَّقَفِيِّ قَالَ أَبُو سَلَمَةَ فَإِنْ كُنْتُ لأَرَى الرُّؤْيَا . وَلَيْسَ فِي حَدِيثِ اللَّيْثِ وَابْنِ نُمَيْرٍ قَوْلُ أَبِي سَلَمَةَ إِلَى آخِرِ الْحَدِيثِ . وَزَادَ ابْنُ رُمْحٍ فِي رِوَايَةِ هَذَا الْحَدِيثِ “ وَلْيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كَانَ عَلَيْهِ ” .
“நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத ஒரு விஷயத்தை (கனவில்) கண்டால் (கண் விழிக்கும்போது) தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பி விட்டு, அதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அபூ கத்தாதா (ரலி) சொன்னதை நான் செவியுற்றேன்.
இந்த ஹதீஸை நான் கேட்(டு அறிந்து விட்)ட காரணத்தால், மலையைவிடக் கனமான ஒரு கனவை நான் கண்டாலும்கூட அதை நான் பொருட்படுத்துவதில்லை.
அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)
குறிப்பு :
லைஸ் (ரஹ்), அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், அபூ ஸலமா (ரஹ்) அவர்களின் (இறுதிக்) கூற்று இடம்பெறவில்லை. முஹம்மது பின் ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், “… மேலும், அவர் முன்பு படுத்திருந்த பக்கத்திலிருந்து திரும்பிப் படுத்துக்கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.