அத்தியாயம்: 44, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4450

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتِ :‏ ‏

اسْتَأْذَنَتْ هَالَةُ بِنْتُ خُوَيْلِدٍ أُخْتُ خَدِيجَةَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَعَرَفَ اسْتِئْذَانَ خَدِيجَةَ فَارْتَاحَ لِذَلِكَ فَقَالَ ‏ “‏ اللَّهُمَّ هَالَةُ بِنْتُ خُوَيْلِدٍ ‏”‏ ‏.‏ فَغِرْتُ فَقُلْتُ وَمَا تَذْكُرُ مِنْ عَجُوزٍ مِنْ عَجَائِزِ قُرَيْشٍ حَمْرَاءِ الشِّدْقَيْنِ هَلَكَتْ فِي الدَّهْرِ فَأَبْدَلَكَ اللَّهُ خَيْرًا مِنْهَا

கதீஜா (ரலி) அவர்களின் (இறப்புக்குப்பின் அவருடைய) சகோதரி ஹாலா பின்த்தி குவைலித் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே) வர அனுமதி கோரினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கதீஜா (ரலி) குரலையும் அனுமதி கேட்கும் முறையையும் நினைவு கூர்ந்து (உணர்ச்சிவசப்பட்டு), “இறைவா! இவர் ஹாலா பின்த்தி குவைலித்!” என்று மகிழ்ந்து கூறினார்கள்.

உடனே நான் சீற்றம் கொண்டு, “தாடைகள் சிவந்து, எப்போதோ இறந்துவிட்ட குறைஷிக் கிழவியருள் ஒருவரை ஏன் (எப்போதும்) நினைவுகூர்கின்றீர்கள்? அவருக்குப் பதிலாக (பருவத்தாலும் அழகாலும்) அவரைவிடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கின்றானே!” என்று கேட்டுவிட்டேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4449

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

لَمْ يَتَزَوَّجِ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى خَدِيجَةَ حَتَّى مَاتَتْ ‏

கதீஜா (ரலி) இறக்கும்வரை நபி (ஸல்) வேறு யாரையும் மணமுடிக்கவில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4448

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

مَا غِرْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى امْرَأَةٍ مِنْ نِسَائِهِ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ لِكَثْرَةِ ذِكْرِهِ إِيَّاهَا وَمَا رَأَيْتُهَا قَطُّ ‏

நான் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றிப் பொறாமை கொண்டதைப் போன்று, நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியர்மீதும் பொறாமை கொண்டதில்லை. ஏனெனில், நபி (ஸல்) கதீஜா அவர்களைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்துவந்தார்கள். ஆனால், நான் கதீஜா அவர்களைப் பார்த்ததே கிடையாது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4447

حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

مَا غِرْتُ عَلَى نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ عَلَى خَدِيجَةَ وَإِنِّي لَمْ أُدْرِكْهَا ‏.‏ قَالَتْ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا ذَبَحَ الشَّاةَ فَيَقُولُ ‏”‏ أَرْسِلُوا بِهَا إِلَى أَصْدِقَاءِ خَدِيجَةَ ‏”‏ ‏.‏ قَالَتْ فَأَغْضَبْتُهُ يَوْمًا فَقُلْتُ خَدِيجَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنِّي قَدْ رُزِقْتُ حُبَّهَا ‏”‏ ‏‏


حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامٌ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ نَحْوَ حَدِيثِ أَبِي أُسَامَةَ إِلَى قِصَّةِ الشَّاةِ وَلَمْ يَذْكُرِ الزِّيَادَةَ بَعْدَهَا

கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி நான் பொறாமை கொண்டதைப் போன்று நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியர்மீதும் பொறாமை கொண்டதில்லை. அவரை நான் சந்திக்கவும் வாய்த்ததில்லை. நபி (ஸல்) ஆட்டை அறுத்தால், “கதீஜாவின் தோழியருக்கு (இதிலிருந்து) கொடுத்தனுப்புங்கள்” என்று கூறுவார்கள்.

ஒரு நாள் நான் பொறாமை கொண்டு, “(எப்போதும்) கதீஜா(வா)?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுவிட்டேன். அப்போது நபி (ஸல்), “அவர்மீது எனதன்பு ஊறிப்போய்விட்டதே!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஹஃப்ஸு பின் கியாஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், ஆட்டை அறுக்கும் செய்தி வரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள விவரங்கள் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 44, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4446

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ وَلَقَدْ هَلَكَتْ قَبْلَ أَنْ يَتَزَوَّجَنِي بِثَلاَثِ سِنِينَ لِمَا كُنْتُ أَسْمَعُهُ يَذْكُرُهَا وَلَقَدْ أَمَرَهُ رَبُّهُ عَزَّ وَجَلَّ أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ مِنْ قَصَبٍ فِي الْجَنَّةِ وَإِنْ كَانَ لَيَذْبَحُ الشَّاةَ ثُمَّ يُهْدِيهَا إِلَى خَلاَئِلِهَا ‏

கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி நான் பொறாமை கொண்டதைப் போன்று (நபியவர்களின்) எந்த மனைவியரின் மீதும் நான் பொறாமை கொண்டதில்லை. ஏனெனில், கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) (அடிக்கடி) நினைவுகூர்வதை நான் செவியுறுவது வழக்கம்.

-என்னை நபி (ஸல்) மணந்து கொள்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கதீஜா இறந்துவிட்டிருந்தார்-

மேலும், முத்து மாளிகை ஒன்று சொர்க்கத்தில் கதீஜாவுக்கு கிடைக்கவுள்ளது என்று அவருக்கு நற்செய்தி சொல்லும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் கட்டளையிட்டிருந்தான். நபி (ஸல்) ஓர் ஆட்டை அறுத்தால் (அதன் இறைச்சியில் சிறிதளவை) கதீஜா (ரலி) அவர்களின் தோழியருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனுப்புவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4445

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

بَشَّرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَدِيجَةَ بِنْتَ خُوَيْلِدٍ بِبَيْتٍ فِي الْجَنَّةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கதீஜா பின் குவைலித் (ரலி) அவர்களுக்குச் சொர்க்கத்தில் மாளிகை ஒன்று கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4444

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ :‏ ‏

قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَشَّرَ خَدِيجَةَ بِبَيْتٍ فِي الْجَنَّةِ قَالَ نَعَمْ بَشَّرَهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ ‏‏


حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، وَجَرِيرٌ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، كُلُّهُمْ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏

நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கதீஜா (ரலி) அவர்களிடம் அவருக்குச் சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று கிடைக்கவிருப்பதாக நற்செய்தி கூறினார்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி), “ஆம்; சொர்க்கத்தில் கூச்சலோ குழப்பமோ களைப்போ இல்லாத முத்து மாளிகை ஒன்று அவர்களுக்குக் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) வழியாக இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4443

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَابْنُ نُمَيْرٍ قَالُوا حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ قَالَ :‏ ‏

أَتَى جِبْرِيلُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْكَ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ فَإِذَا هِيَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنْ رَبِّهَا عَزَّ وَجَلَّ وَمِنِّي وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ ‏


قَالَ أَبُو بَكْرٍ فِي رِوَايَتِهِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَلَمْ يَقُلْ سَمِعْتُ ‏.‏ وَلَمْ يَقُلْ فِي الْحَدِيثِ وَمِنِّي ‏‏

நபி (ஸல்) அவர்களிடம் (ஒரு முறை வானவர்) ஜிப்ரீல் (அலை) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ! கதீஜா தம்முடன் குழம்பு, அல்லது உணவு, அல்லது குடிபானம் உள்ள பாத்திரத்தை எடுத்துக்கொண்டு உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் ஸலாம் கூறி, அவருக்குச் சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “என் தரப்பிலிருந்தும்” என்பது இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 44, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4442

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، جَمِيعًا عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ غَيْرُ مَرْيَمَ بِنْتِ عِمْرَانَ وَآسِيَةَ امْرَأَةِ فِرْعَوْنَ وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ ‏”‏ ‏

“நிறைவான கூர்த்த மதியுடையோராக ஆண்களில் பலர் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் மகள் மர்யத்தையும் ஃபிர்அவ்னின் மனைவி ஆசியாவையும் தவிர வேறெவரும் நிறைவான அறிவு பெற்றிருக்கவில்லை. எல்லா வகை உணவுகளையும்விட ‘ஸரீத்’ (தக்கடி) எனும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்று எல்லாப் பெண்களையும்விட ஆயிஷாவுக்குத் தனிச் சிறப்பு இருக்கின்றது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4441

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَابْنُ نُمَيْرٍ وَوَكِيعٌ وَأَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، كُلُّهُمْ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، وَاللَّفْظُ، حَدِيثُ أَبِي أُسَامَةَ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ قَالَ :‏ ‏

سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ يَقُولُ سَمِعْتُ عَلِيًّا، بِالْكُوفَةِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَخَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ ‏”‏ ‏


قَالَ أَبُو كُرَيْبٍ وَأَشَارَ وَكِيعٌ إِلَى السَّمَاءِ وَالأَرْضِ ‏‏

“(அக்கால) உலகப் பெண்களிலேயே  சிறந்தவர் மர்யம் பின்த்தி இம்ரான் ஆவார். (இக்கால) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா பின்த்தி குவைலித் ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி)


குறிப்புகள் :

இதை அலீ (ரலி) கூஃபா நகரில் (இருந்தபோது) குறிப்பிட்டதாக அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூகுரைப் (ரஹ்) கூறுகின்றார்:

இதைக் கூறியபோது அறிவிப்பாளர் வகீஉ (ரஹ்) வானத்தையும் பூமியையும் நோக்கி (இம்மையிலும் மறுமையிலும் சிறந்தவர்) என்று சைகை செய்தார்கள்.