அத்தியாயம்: 44, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4399

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ – عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي حَرْمَلَةَ، عَنْ عَطَاءٍ، وَسُلَيْمَانَ ابْنَىْ يَسَارٍ وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَةَ قَالَتْ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُضْطَجِعًا فِي بَيْتِي كَاشِفًا عَنْ فَخِذَيْهِ أَوْ سَاقَيْهِ فَاسْتَأْذَنَ أَبُو بَكْرٍ فَأَذِنَ لَهُ وَهُوَ عَلَى تِلْكَ الْحَالِ فَتَحَدَّثَ ثُمَّ اسْتَأْذَنَ عُمَرُ فَأَذِنَ لَهُ وَهُوَ كَذَلِكَ فَتَحَدَّثَ ثُمَّ اسْتَأْذَنَ عُثْمَانُ فَجَلَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَسَوَّى ثِيَابَهُ – قَالَ مُحَمَّدٌ وَلاَ أَقُولُ ذَلِكَ فِي يَوْمٍ وَاحِدٍ – فَدَخَلَ فَتَحَدَّثَ فَلَمَّا خَرَجَ قَالَتْ عَائِشَةُ دَخَلَ أَبُو بَكْرٍ فَلَمْ تَهْتَشَّ لَهُ وَلَمْ تُبَالِهِ ثُمَّ دَخَلَ عُمَرُ فَلَمْ تَهْتَشَّ لَهُ وَلَمْ تُبَالِهِ ثُمَّ دَخَلَ عُثْمَانُ فَجَلَسْتَ وَسَوَّيْتَ ثِيَابَكَ فَقَالَ ‏ “‏ أَلاَ أَسْتَحِي مِنْ رَجُلٍ تَسْتَحِي مِنْهُ الْمَلاَئِكَةُ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) எனது வீட்டில் தமது தொடைகளிலிருந்து / கணுக்கால்களிலிருந்து (சற்று துணி) விலகியிருந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ரு (ரலி) உள்ளே வர அனுமதி கேட்டார்கள். படுத்திருந்த நிலைலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூபக்ரு அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். அவர்கள் (வந்து) பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிறகு உமர் (ரலி) உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் உள்ளே வர அனுமதியளித்தார்கள். அப்போதும் அதே நிலையிலேயே (படுத்துக்கொண்டு) இருந்தார்கள். உமர் அவர்களும் (வந்து) பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) உள்ளே வர அனுமதி கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (எழுந்து) உட்கார்ந்து தமது ஆடையை ஒழுங்குபடுத்திக்கொண்டார்கள். #

உஸ்மான் (ரலி) உள்ளே வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் நான், “அபூபக்ரு (ரலி) உள்ளே வந்தபோது அவருக்காக நீங்கள் (பெரிதாக) அலட்டிக்கொள்ளவில்லை; பிறகு உமர் அவர்கள் உள்ளே வந்தார்கள். அப்போதும் நீங்கள் (பெரிதாக) அலட்டிக்கொள்ளவில்லை. பிறகு உஸ்மான் (ரலி) உள்ளே வந்தபோது (மட்டும்) நீங்கள் (எழுந்து) உட்கார்ந்து உங்கள் ஆடையைச் சரி செய்துகொண்டீர்கள். (ஏன்?)” என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “வானவர்கள் கண்டு வெட்கப்படுபவரை, நான் கண்டால் வெட்கப்பட வேண்டாமா!” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

#“(இம்மூன்று நிகழ்வுகளும்) ஒரே நாளில் நடந்தன என நான் சொல்ல(வர)வில்லை” என்று அறிவிப்பாளர் முஹம்மது பின் அபீஹர்மலா கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment