அத்தியாயம்: 44, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4402

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِسْكِينٍ الْيَمَامِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، – وَهُوَ ابْنُ بِلاَلٍ – عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَخْبَرَنِي أَبُو مُوسَى الأَشْعَرِيُّ :‏

أَنَّهُ تَوَضَّأَ فِي بَيْتِهِ ثُمَّ خَرَجَ فَقَالَ لأَلْزَمَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَلأَكُونَنَّ مَعَهُ يَوْمِي هَذَا ‏.‏ قَالَ فَجَاءَ الْمَسْجِدَ فَسَأَلَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا خَرَجَ ‏.‏ وَجَّهَ هَا هُنَا – قَالَ – فَخَرَجْتُ عَلَى أَثَرِهِ أَسْأَلُ عَنْهُ حَتَّى دَخَلَ بِئْرَ أَرِيسٍ – قَالَ – فَجَلَسْتُ عِنْدَ الْبَابِ وَبَابُهَا مِنْ جَرِيدٍ حَتَّى قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَاجَتَهُ وَتَوَضَّأَ فَقُمْتُ إِلَيْهِ فَإِذَا هُوَ قَدْ جَلَسَ عَلَى بِئْرِ أَرِيسٍ وَتَوَسَّطَ قُفَّهَا وَكَشَفَ عَنْ سَاقَيْهِ وَدَلاَّهُمَا فِي الْبِئْرِ – قَالَ – فَسَلَّمْتُ عَلَيْهِ ثُمَّ انْصَرَفْتُ فَجَلَسْتُ عِنْدَ الْبَابِ فَقُلْتُ لأَكُونَنَّ بَوَّابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْيَوْمَ ‏.‏ فَجَاءَ أَبُو بَكْرٍ فَدَفَعَ الْبَابَ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ أَبُو بَكْرٍ ‏.‏ فَقُلْتُ عَلَى رِسْلِكَ – قَالَ – ثُمَّ ذَهَبْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا أَبُو بَكْرٍ يَسْتَأْذِنُ فَقَالَ ‏”‏ ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ ‏”‏ ‏.‏ قَالَ فَأَقْبَلْتُ حَتَّى قُلْتُ لأَبِي بَكْرٍ ادْخُلْ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُبَشِّرُكَ بِالْجَنَّةِ – قَالَ – فَدَخَلَ أَبُو بَكْرٍ فَجَلَسَ عَنْ يَمِينِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَعَهُ فِي الْقُفِّ وَدَلَّى رِجْلَيْهِ فِي الْبِئْرِ كَمَا صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَكَشَفَ عَنْ سَاقَيْهِ ثُمَّ رَجَعْتُ فَجَلَسْتُ وَقَدْ تَرَكْتُ أَخِي يَتَوَضَّأُ وَيَلْحَقُنِي فَقُلْتُ إِنْ يُرِدِ اللَّهُ بِفُلاَنٍ – يُرِيدُ أَخَاهُ – خَيْرًا يَأْتِ بِهِ ‏.‏ فَإِذَا إِنْسَانٌ يُحَرِّكُ الْبَابَ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏.‏ فَقُلْتُ عَلَى رِسْلِكَ ‏.‏ ثُمَّ جِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَلَّمْتُ عَلَيْهِ وَقُلْتُ هَذَا عُمَرُ يَسْتَأْذِنُ فَقَالَ ‏”‏ ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ ‏”‏ ‏.‏ فَجِئْتُ عُمَرَ فَقُلْتُ أَذِنَ وَيُبَشِّرُكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْجَنَّةِ – قَالَ – فَدَخَلَ فَجَلَسَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْقُفِّ عَنْ يَسَارِهِ وَدَلَّى رِجْلَيْهِ فِي الْبِئْرِ ثُمَّ رَجَعْتُ فَجَلَسْتُ فَقُلْتُ إِنْ يُرِدِ اللَّهُ بِفُلاَنٍ خَيْرًا – يَعْنِي أَخَاهُ – يَأْتِ بِهِ فَجَاءَ إِنْسَانٌ فَحَرَّكَ الْبَابَ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ عُثْمَانُ بْنُ عَفَّانَ ‏.‏ فَقُلْتُ عَلَى رِسْلِكَ – قَالَ – وَجِئْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ فَقَالَ ‏”‏ ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ مَعَ بَلْوَى تُصِيبُهُ ‏”‏ ‏.‏ قَالَ فَجِئْتُ فَقُلْتُ ادْخُلْ وَيُبَشِّرُكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْجَنَّةِ مَعَ بَلْوَى تُصِيبُكَ – قَالَ – فَدَخَلَ فَوَجَدَ الْقُفَّ قَدْ مُلِئَ فَجَلَسَ وُجَاهَهُمْ مِنَ الشِّقِّ الآخَرِ ‏


قَالَ شَرِيكٌ فَقَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ فَأَوَّلْتُهَا قُبُورَهُمْ ‏.‏

حَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ حَدَّثَنِي أَبُو مُوسَى الأَشْعَرِيُّ، هَا هُنَا – وَأَشَارَ لِي سُلَيْمَانُ إِلَى مَجْلِسِ سَعِيدٍ نَاحِيَةَ الْمَقْصُورَةِ – قَالَ أَبُو مُوسَى خَرَجْتُ أُرِيدُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدْتُهُ قَدْ سَلَكَ فِي الأَمْوَالِ فَتَبِعْتُهُ فَوَجَدْتُهُ قَدْ دَخَلَ مَالاً فَجَلَسَ فِي الْقُفِّ وَكَشَفَ عَنْ سَاقَيْهِ وَدَلاَّهُمَا فِي الْبِئْرِ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ يَحْيَى بْنِ حَسَّانَ وَلَمْ يَذْكُرْ قَوْلَ سَعِيدٍ فَأَوَّلْتُهَا قُبُورَهُمْ ‏.‏

حَدَّثَنَا حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ قَالاَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ، أَخْبَرَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ سَعِيدِ، بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا إِلَى حَائِطٍ بِالْمَدِينَةِ لِحَاجَتِهِ فَخَرَجْتُ فِي إِثْرِهِ ‏.‏ وَاقْتَصَّ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ وَذَكَرَ فِي الْحَدِيثِ قَالَ ابْنُ الْمُسَيَّبِ ‏.‏ فَتَأَوَّلْتُ ذَلِكَ قُبُورَهُمُ اجْتَمَعَتْ هَا هُنَا وَانْفَرَدَ عُثْمَانُ ‏

நான் என் வீட்டில் உளூச் செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்) “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே இன்று (முழுவதும்) இருக்கப்போகின்றேன்” என்று சொல்லிக்கொண்டேன். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்தப் பக்கம்தான் போனார்கள்” என்று (ஒரு திசையைச் சுட்டிக்) கூறினர்.

நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சென்ற திசையில்) அவர்களைப் பின் தொடர்ந்து விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (‘குபா’வுக்கு அருகிலுள்ள) ‘அரீஸ் கிணற்றுத் தோட்ட’த்திற்குச் சென்று அதன் தலைவாசலில் அமர்ந்தேன். அதன் கதவு பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொண்டு உளூச் செய்தார்கள். உடனே நான் எழுந்து அவர்களிடம் சென்றேன். அவர்கள் அரீஸ் கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கணுக்கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விட்டபடி அமர்ந்திருந்தார்கள்.

நான் அவர்களுக்கு ஸலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்) “இன்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிற்காவலனாக இருப்பேன்” என்று சொல்லிக்கொண்டேன். அப்போது அபூபக்ரு (ரலி) வந்து கதவைத் தள்ளினார்கள். நான் “யார்?” என்று கேட்டேன். அவர்கள், “அபூபக்ரு (வந்துள்ளேன்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான் “சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்று, “அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு (வந்து உங்களிடம் உள்ளே வர) அனுமதி கேட்கின்றார்” என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்!” என்று கூறினார்கள். நான் அபூபக்ரு (ரலி) அவர்களிடம் சென்று, “உள்ளே வாருங்கள்!. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவிக்கின்றார்கள்!” என்று சொன்னேன். அபூபக்ரு (ரலி) உள்ளே வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்துகொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்றே, தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டு, கணுக்கால்களைத் திறந்துகொண்டார்கள்.

பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்துகொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை உளூச் செய்துகொண்டு என்னுடன் வந்து சேர்ந்துகொள்ளும்படிக் கூறி, விட்டு வந்திருந்தேன். ஆகவே (எனக்குள்), “அல்லாஹ் இன்னவருக்கு (அதாவது என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான்” என்று சொல்லிக்கொண்டேன்.

அப்போது ஒருவர் கதவை அசைத்தார். நான் “யார்?” என்று கேட்டேன். வந்தவர், “உமர் பின் அல்கத்தாப் (வந்துள்ளேன்)” என்று சொன்னார். நான் “சற்றுப் பொறுத்திருங்கள்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறி, “உமர் வந்து (உங்களிடம் உள்ளே வர) அனுமதி கேட்கின்றார்கள்” என்று சொன்னேன். “அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறுங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்.

நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதி அளித்துவிட்டார்கள்; நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகின்றார்கள்!” என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கம் அமர்ந்துகொண்டு தம் இரு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டுக்கொண்டார்கள்.

பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்துகொண்டேன். “அல்லாஹ் இன்னவருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான்” என்று (முன்பு போலவே எனக்குள்) கூறிக்கொண்டேன்.

அப்போது ஒருவர் வந்து கதவை அசைத்தார். நான் “யார்?” என்று கேட்டேன். அவர், “உஸ்மான் பின் அஃப்பான் (வந்திருக்கின்றேன்)” என்று பதிலளித்தார். அப்போது நான், “சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (உஸ்மான் (ரலி) வந்திருக்கும்) செய்தியை அறிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவருக்கு அனுமதி கொடுங்கள். அவர் சொர்க்கவாசி என்ற நற்செய்தியை அவரிடம் கூறுங்கள். அத்துடன் அவருக்குத் துன்பம் நேரவிருக்கிறது (என்ற செய்தியையும் சொல்லுங்கள்)” என்று சொன்னார்கள்.

அவ்வாறே நான் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) சென்று அவர்களிடம், “உள்ளே வாருங்கள். உங்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நற்செய்தி கூறுகிறார்கள். அத்துடன் உங்களுக்குத் துன்பம் நேரவிருக்கிறது என்ற செய்தியையும் சொன்னார்கள்” என்று கூறினேன்.

அவர்கள் உள்ளே வந்து (பார்த்தபோது) சுற்றுச் சுவர் நிரம்பிவிட்டிருப்பதைக் கண்டார்கள். ஆகவே, மற்றொரு பக்கத்தில் அவர்கள் (மூவருக்கும்) எதிரே அமர்ந்துகொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறுகின்றார்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), “நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ரு (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும்) ஒரே சுவரில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த நிலையையும் உஸ்மான் (ரலி) எதிர்ச் சுவரில் தனியே அமர்ந்திருந்த நிலையையும் (ஒப்பு நோக்கி, தற்போது) அவர்களின் அடக்கத்தலங்கள் அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்” என்று கூறினார்கள்.

ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நாடி நான் புறப்பட்டேன். அவர்கள் தோட்டங்கள் உள்ள பகுதிக்குச் சென்றுள்ளதாக அறிந்தேன். அவர்களைப் பின்தொடர்ந்து சென்றதில், ஒரு தோட்டத்திற்குள் அவர்கள் சென்றிருப்பதைக் கண்டேன். அங்கு கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து, தம் கணுக்கால்களைத் திறந்து, கிணற்றுக்குள் தொங்கவிட்டிருந்தார்கள் …” என அபூமூஸா (ரலி) கூறியதாக ஆரம்பமாகிறது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறியதாவது: எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), “அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) இந்த இடத்தில்தான் எனக்கு இதை அறிவித்தார்கள்” என்று கூறிவிட்டு, அங்கிருந்த கோட்டையின் ஓர் ஓரத்தைச் சுட்டிக்காட்டினார்கள்.

முஹம்மது பின் ஜ அஃபர் பின் அபீகஸீர் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவில் இருந்த ஒரு தோட்டத்துக்குத் தமது (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன் …” என்று ஆரம்பமாகிறது.

மேலும், “அவர்கள் மூவருடைய அடக்கத் தலங்கள் இந்த இடத்தில் ஒன்றாக இருப்பதையும் உஸ்மான் (ரலி) அவர்களின் அடக்கத் தலம் தனியாக (மற்றோர் இடத்தில்) அமைந்திருப்பதையும் குறிப்பதாக விளக்கம் கண்டேன்” எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 44, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4401

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ عُثْمَانَ بْنِ غِيَاثٍ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ :‏

قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَائِطٍ مِنْ حَائِطِ الْمَدِينَةِ وَهُوَ مُتَّكِئٌ يَرْكُزُ بِعُودٍ مَعَهُ بَيْنَ الْمَاءِ وَالطِّينِ إِذَا اسْتَفْتَحَ رَجُلٌ فَقَالَ ‏”‏ افْتَحْ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ ‏”‏ ‏.‏ قَالَ فَإِذَا أَبُو بَكْرٍ فَفَتَحْتُ لَهُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ – قَالَ – ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ فَقَالَ ‏”‏ افْتَحْ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ ‏”‏ ‏.‏ قَالَ فَذَهَبْتُ فَإِذَا هُوَ عُمَرُ فَفَتَحْتُ لَهُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ – قَالَ – فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ افْتَحْ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ عَلَى بَلْوَى تَكُونُ ‏”‏ ‏.‏ قَالَ فَذَهَبْتُ فَإِذَا هُوَ عُثْمَانُ بْنُ عَفَّانَ – قَالَ – فَفَتَحْتُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ – قَالَ – وَقُلْتُ الَّذِي قَالَ فَقَالَ اللَّهُمَّ صَبْرًا أَوِ اللَّهُ الْمُسْتَعَانُ ‏


حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ حَائِطًا وَأَمَرَنِي أَنْ أَحْفَظَ الْبَابَ ‏.‏ بِمَعْنَى حَدِيثِ عُثْمَانَ بْنِ غِيَاثٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவின் ஒரு தோட்டத்தில், தம்மிடமிருந்த குச்சியை நீரிலும் களிமண்ணிலும் ஊன்றியபடி சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வந்து தோட்டத்தின் வாயிற்கதவைத்) திறக்கும்படிக் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவருக்காகக் கதவைத் திறப்பீராக!; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்வீராக!” என்று சொன்னார்கள். (நான் வாயிற்கதவைத் திறந்தேன்.) அங்கு அபூபக்ரு (ரலி) நின்றார்கள். அவர்களுக்கு வாயிற்கதவைத் திறந்துவிட்டு, அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னேன்.

பிறகு மற்றொருவர் (வந்து வாயிற்கதவைத்) திறக்கும்படிக் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(அவருக்குக்) கதவைத் திறப்பீராக!; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி கூறுவீராக!” என்று சொன்னார்கள். நான் சென்று பார்த்தபோது, அங்கு உமர் (ரலி) இருந்தார்கள். அவர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு, அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னேன்.

பிறகு இன்னொருவர் (வந்து கதவைத்) திறக்கும்படி கேட்டார். அப்போது (சாய்ந்து கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (எழுந்து நேராக) அமர்ந்து, “அவருக்கு வாயிற்கதவைத் திறப்பீராக!; (அவருக்கு) நேரவிருக்கும் துன்பத்தையடுத்து, அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி கூறுவீராக!” என்று சொன்னார்கள். நான் சென்று (பார்த்தபோது) அங்கு உஸ்மான் பின் அஃப்ஃபான் (ரலி) இருந்தார்கள்.

நான் கதவைத் திறந்துவிட்டு, அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவருக்குத் துன்பம் நேர விருப்பதாக, அதையடுத்து அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாகக்) கூறியதையும் சொன்னேன்.

அப்போது உஸ்மான் (ரலி), “இறைவா! எனக்குப் பொறுமையை வழங்குவாயாக!” அல்லது “(எனக்கு நேரவிருக்கும் அத்துன்பத்தின்போது) அல்லாஹ்வே உதவி புரிபவன் ஆவான்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு :

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டு, அதன் வாசலில் காவலுக்கு நிற்கும்படி என்னைப் பணித்தார்கள் …” என்று ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 44, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4400

حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، أَنَّ سَعِيدَ بْنَ الْعَاصِ، أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَعُثْمَانَ حَدَّثَاهُ :‏

أَنَّ أَبَا بَكْرٍ اسْتَأْذَنَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ لاَبِسٌ مِرْطَ عَائِشَةَ فَأَذِنَ لأَبِي بَكْرٍ وَهُوَ كَذَلِكَ فَقَضَى إِلَيْهِ حَاجَتَهُ ثُمَّ انْصَرَفَ ثُمَّ اسْتَأْذَنَ عُمَرُ فَأَذِنَ لَهُ وَهُوَ عَلَى تِلْكَ الْحَالِ فَقَضَى إِلَيْهِ حَاجَتَهُ ثُمَّ انْصَرَفَ ‏.‏ قَالَ عُثْمَانُ ثُمَّ اسْتَأْذَنْتُ عَلَيْهِ فَجَلَسَ وَقَالَ لِعَائِشَةَ ‏”‏ اجْمَعِي عَلَيْكِ ثِيَابَكِ ‏”‏ ‏.‏ فَقَضَيْتُ إِلَيْهِ حَاجَتِي ثُمَّ انْصَرَفْتُ فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ مَا لِي لَمْ أَرَكَ فَزِعْتَ لأَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَمَا فَزِعْتَ لِعُثْمَانَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّ عُثْمَانَ رَجُلٌ حَيِيٌّ وَإِنِّي خَشِيتُ إِنْ أَذِنْتُ لَهُ عَلَى تِلْكَ الْحَالِ أَنْ لاَ يَبْلُغَ إِلَىَّ فِي حَاجَتِهِ ‏”‏


حَدَّثَنَاهُ عَمْرٌو النَّاقِدُ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، كُلُّهُمْ عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ أَنَّ سَعِيدَ بْنَ الْعَاصِ، أَخْبَرَهُ أَنَّ عُثْمَانَ وَعَائِشَةَ حَدَّثَاهُ أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ اسْتَأْذَنَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ عُقَيْلٍ عَنِ الزُّهْرِيِّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனது கம்பளியாடையைப் போர்த்தியபடி தமது விரிப்பில் ஒருக்களித்துப் படுத்திருந்தபோது, அபூபக்ரு (ரலி) உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதே நிலையில் (படுத்துக்கொண்டு) அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். அவர்கள் உள்ளே வந்து தமது தேவைகளை(ப் பற்றி பேசி) முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்கள்.

பிறகு உமர் (ரலி) உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதே நிலையில் (படுத்துக்கொண்டே) உமர் (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். உமர் (ரலி) உள்ளே வந்து தமது தேவைகளை(ப் பற்றி பேசி) முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்கள்.

உஸ்மான் (ரலி) கூறுகிறார்கள்: பிறகு நான் சென்று, உள்ளே நுழைய அவர்களிடம் அனுமதி கேட்டேன். உடனே அவர்கள் (எழுந்து) அமர்ந்துகொண்டார்கள். மேலும் (தம் மனைவி) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “உனது ஆடையை சீராக்கி(உன்னை மறைத்து)க்கொள்!” என்று கூறினார்கள். நான் அவர்களிடம் எனது தேவைகளை(ப் பற்றி பேசி) முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றேன்.

அப்போது ஆயிஷா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு, உமர் ஆகியோருக்காக அலட்டிக்கொள்ளாத நீங்கள் உஸ்மான் அவர்களுக்காகப் பதறி(எழுந்து)விட்டீர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உஸ்மான் வெட்க உணர்வு மிக்கவர். நான் அதே நிலையில் இருந்துகொண்டு அவருக்கு உள்ளே வர அனுமதியளித்தால், அவர் தமது தேவையை என்னிடம் தெரிவிக்காமலேயே போய்விடுவாரோ என்று நான் ஐயுற்றேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) & உஸ்மான் (ரலி)


குறிப்பு :

யஃகூப் பின் இப்ராஹீம் பின் ஸஅத் (ரஹ்) வழி அறிவிப்பு, “அபூபக்ரு (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டார்கள்…” என்று ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 44, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4399

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ – عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي حَرْمَلَةَ، عَنْ عَطَاءٍ، وَسُلَيْمَانَ ابْنَىْ يَسَارٍ وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَةَ قَالَتْ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُضْطَجِعًا فِي بَيْتِي كَاشِفًا عَنْ فَخِذَيْهِ أَوْ سَاقَيْهِ فَاسْتَأْذَنَ أَبُو بَكْرٍ فَأَذِنَ لَهُ وَهُوَ عَلَى تِلْكَ الْحَالِ فَتَحَدَّثَ ثُمَّ اسْتَأْذَنَ عُمَرُ فَأَذِنَ لَهُ وَهُوَ كَذَلِكَ فَتَحَدَّثَ ثُمَّ اسْتَأْذَنَ عُثْمَانُ فَجَلَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَسَوَّى ثِيَابَهُ – قَالَ مُحَمَّدٌ وَلاَ أَقُولُ ذَلِكَ فِي يَوْمٍ وَاحِدٍ – فَدَخَلَ فَتَحَدَّثَ فَلَمَّا خَرَجَ قَالَتْ عَائِشَةُ دَخَلَ أَبُو بَكْرٍ فَلَمْ تَهْتَشَّ لَهُ وَلَمْ تُبَالِهِ ثُمَّ دَخَلَ عُمَرُ فَلَمْ تَهْتَشَّ لَهُ وَلَمْ تُبَالِهِ ثُمَّ دَخَلَ عُثْمَانُ فَجَلَسْتَ وَسَوَّيْتَ ثِيَابَكَ فَقَالَ ‏ “‏ أَلاَ أَسْتَحِي مِنْ رَجُلٍ تَسْتَحِي مِنْهُ الْمَلاَئِكَةُ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) எனது வீட்டில் தமது தொடைகளிலிருந்து / கணுக்கால்களிலிருந்து (சற்று துணி) விலகியிருந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ரு (ரலி) உள்ளே வர அனுமதி கேட்டார்கள். படுத்திருந்த நிலைலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூபக்ரு அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். அவர்கள் (வந்து) பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிறகு உமர் (ரலி) உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் உள்ளே வர அனுமதியளித்தார்கள். அப்போதும் அதே நிலையிலேயே (படுத்துக்கொண்டு) இருந்தார்கள். உமர் அவர்களும் (வந்து) பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) உள்ளே வர அனுமதி கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (எழுந்து) உட்கார்ந்து தமது ஆடையை ஒழுங்குபடுத்திக்கொண்டார்கள். #

உஸ்மான் (ரலி) உள்ளே வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் நான், “அபூபக்ரு (ரலி) உள்ளே வந்தபோது அவருக்காக நீங்கள் (பெரிதாக) அலட்டிக்கொள்ளவில்லை; பிறகு உமர் அவர்கள் உள்ளே வந்தார்கள். அப்போதும் நீங்கள் (பெரிதாக) அலட்டிக்கொள்ளவில்லை. பிறகு உஸ்மான் (ரலி) உள்ளே வந்தபோது (மட்டும்) நீங்கள் (எழுந்து) உட்கார்ந்து உங்கள் ஆடையைச் சரி செய்துகொண்டீர்கள். (ஏன்?)” என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “வானவர்கள் கண்டு வெட்கப்படுபவரை, நான் கண்டால் வெட்கப்பட வேண்டாமா!” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

#“(இம்மூன்று நிகழ்வுகளும்) ஒரே நாளில் நடந்தன என நான் சொல்ல(வர)வில்லை” என்று அறிவிப்பாளர் முஹம்மது பின் அபீஹர்மலா கூறுகின்றார்.