அத்தியாயம்: 44, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4522

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، كُلُّهُمْ عَنْ سُفْيَانَ، قَالَ عَمْرٌو حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ عُمَرَ، مَرَّ بِحَسَّانَ وَهُوَ يُنْشِدُ الشِّعْرَ فِي الْمَسْجِدِ فَلَحَظَ إِلَيْهِ فَقَالَ قَدْ كُنْتُ أُنْشِدُ وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ ‏.‏ ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ فَقَالَ أَنْشُدُكَ اللَّهَ أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ أَجِبْ عَنِّي اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ ‏”‏ ‏.‏ قَالَ اللَّهُمَّ نَعَمْ ‏


حَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، أَنَّ حَسَّانَ، قَالَ فِي حَلْقَةٍ فِيهِمْ أَبُو هُرَيْرَةَ أَنْشُدُكَ اللَّهَ يَا أَبَا هُرَيْرَةَ أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ مِثْلَهُ ‏.‏

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), மஸ்ஜிதுந் நபவீயில் கவி பாடிக்கொண்டிருந்தபோது, அங்கு (கலீஃபா) உமர் (ரலி) வந்தார்கள். ஹஸ்ஸானை நோக்கி (பாடாமல் அமைதி காக்கும்படி) சைகை செய்தார்கள்.

ஹஸ்ஸான் (ரலி), “நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களைவிடச் சிறந்தவர் (நபியவர்கள்) இருந்தபோது கவி பாடிக்கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, என்னை நோக்கித் திரும்பி, “அல்லாஹ்வின் பெயரால் உம்மிடம் கேட்கிறேன்: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ் (தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல்) மூலம் வலிமையூட்டுவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “அல்லாஹ் சாட்சியாக, ஆம்!” என்று பதிலளித்தேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், ஹஸ்ஸான் (ரலி) ஓர் அவையில் இருந்தார்கள். அதில் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது ஹஸ்ஸான் (ரலி), “அபூ ஹுரைரா! அல்லாஹ்வின் பெயரால் உம்மிடம் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இவ்வாறு) கூறியதை நீங்கள் செவியுற்றீர்கள் அல்லவா?” என்று வினவியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: