அத்தியாயம்: 44, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4523

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ :‏

سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ، يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ أَنْشُدُكَ اللَّهَ هَلْ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ يَا حَسَّانُ أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ ‏

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “அபூ ஹுரைரா! அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றேன்: நபி (ஸல்), ‘ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் சார்பாக எதிரிகளுக்கு (உம் கவிதை மூலம்) பதிலளிப்பீராக! இறைவா! ரூஹுல் குதுஸ் (எனும் தூய ஆத்மா ஜிப்ரீல்) மூலம் இவருக்கு வலிமையூட்டுவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா, இல்லையா?” என்று கேட்டு சாட்சியம் சொல்ல அழைத்தார்கள். அப்போது அபூஹுரைரா (ரலி) “ஆம் (செவியுற்றேன்)” என்று (சாட்சியம்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) வழியாக அபூஸலமா (ரஹ்)

Share this Hadith: