அத்தியாயம்: 44, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4527

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

قَالَ حَسَّانُ يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي فِي أَبِي سُفْيَانَ قَالَ ‏ “‏ كَيْفَ بِقَرَابَتِي مِنْهُ ‏”‏ ‏.‏ قَالَ وَالَّذِي أَكْرَمَكَ لأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعَرَةُ مِنَ الْخَمِيرِ ‏.‏ فَقَالَ حَسَّانُ وَإِنَّ سَنَامَ الْمَجْدِ مِنْ آلِ هَاشِمٍ بَنُو بِنْتِ مَخْزُومٍ وَوَالِدُكَ الْعَبْدُ قَصِيدَتَهُ هَذِهِ


حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ قَالَتِ اسْتَأْذَنَ حَسَّانُ بْنُ ثَابِتٍ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي هِجَاءِ الْمُشْرِكِينَ ‏.‏ وَلَمْ يَذْكُرْ أَبَا سُفْيَانَ وَقَالَ بَدَلَ الْخَمِيرِ الْعَجِينِ ‏.‏

ஹஸ்ஸான் (ரலி), (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! அபூஸுஃப்யானுக்கு எதிராக (அவருடைய வசைக் கவிகளுக்குப் பதிலடி கொடுக்க) எனக்கு அனுமதி அளியுங்கள்” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்), “(அவரோடு பின்னிக்கிடக்கும்) என்னுடைய வமிசாவளியை அவரிடமிருந்து எப்படி(பிரித்து)ப் பாடுவீர்?” என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி), “உங்களை மேன்மைப்படுத்தியுள்ள(இறை)வன் மீதாணையாக! (அவர்களைப் பற்றி நான் எதிர்க் கவி கூறும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுவதைப் போன்று உங்களை உருவி எடுத்துவிடுவேன்” என்று கூறினார்கள்.

“ஹாஷிம் கிளையின்
மக்ஸூம் குலமகளின் மக்களுக்கே
மேன்மையின் சிகரம் உரியது.
ஆனால்,
(அபூஸுஃப்யானே!) உமது தந்தை,
(அப்து மனாஃபின்)
அடிமையாவார்”

என்பதே அவரது அந்தக் கவிதையாகும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்தது (ரஹ்) வழி அறிவிப்பு, “ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் (குறைஷி) இணைவைப்பாளர்களைத் தாக்கி (எதிர்க் கவி) பாட அனுமதி கேட்டார்கள்” என்றே ஆரம்பமாகிறது. “அபூஸுஃப்யானுக்கெதிராக” எனும் குறிப்பு இல்லை.

Share this Hadith: