அத்தியாயம்: 44, பாடம்: 40, ஹதீஸ் எண்: 4540

حَدَّثَنِي عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، وَأَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْمَعْقِرِيُّ، قَالاَ حَدَّثَنَا النَّضْرُ، – وَهُوَ ابْنُ مُحَمَّدٍ الْيَمَامِيُّ – حَدَّثَنَا عِكْرِمَةُ، حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ، حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ قَالَ :‏

كَانَ الْمُسْلِمُونَ لاَ يَنْظُرُونَ إِلَى أَبِي سُفْيَانَ وَلاَ يُقَاعِدُونَهُ فَقَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَا نَبِيَّ اللَّهِ ثَلاَثٌ أَعْطِنِيهِنَّ قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ ‏.‏ قَالَ عِنْدِي أَحْسَنُ الْعَرَبِ وَأَجْمَلُهُ أُمُّ حَبِيبَةَ بِنْتُ أَبِي سُفْيَانَ أُزَوِّجُكَهَا قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ ‏.‏ قَالَ وَمُعَاوِيَةُ تَجْعَلُهُ كَاتِبًا بَيْنَ يَدَيْكَ ‏.‏ قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ ‏.‏ قَالَ وَتُؤَمِّرُنِي حَتَّى أُقَاتِلَ الْكُفَّارَ كَمَا كُنْتُ أُقَاتِلُ الْمُسْلِمِينَ ‏.‏ قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ 


قَالَ أَبُو زُمَيْلٍ وَلَوْلاَ أَنَّهُ طَلَبَ ذَلِكَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا أَعْطَاهُ ذَلِكَ لأَنَّهُ لَمْ يَكُنْ يُسْئَلُ شَيْئًا إِلاَّ قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏

அபூஸுஃப்யான் (ரலி) (இஸ்லாத்தை ஏற்ற பிறகும்) அவரை முஸ்லிம்கள் ஏறெடுத்துப் பார்க்காமலும் தம் அவைகளில் அனுமதிக்காமலும் இருந்து வந்தனர்.

நபி (ஸல்) அவர்களிடம் அபூஸுஃப்யன், “அல்லாஹ்வின் தூதரே! மூன்று கோரிக்கைகளை எனக்கு(நிறைவேற்றி)த் தாருங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) “ஆகட்டும்!” என்றார்கள். அபூஸுஃப்யான் (ரலி), “என்னிடம் அரபியரிலேயே அழகு மிகுந்த, இலட்சணமான ஒரு பெண் இருக்கின்றார். அவர்தான் (என் மகள்) உம்மு ஹபீபா பின்த்தி அபீஸுஃப்யான். அவரை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவேன்” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) “ஆகட்டும்!” என்றார்கள்.

அடுத்து, “நீங்கள் (என் மகன்) முஆவியாவை உங்களுடைய எழுத்தராக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கும் நபி (ஸல்), “ஆகட்டும்!” என்றார்கள். அடுத்து “படைப் பிரிவொன்றுக்கு என்னைத் தலைவராக்குங்கள். முஸ்லிம்களை எதிர்த்து நான் போரிட்டுக் கொண்டிருந்ததைப் போன்று இறைமறுப்பாளர்களை எதிர்த்து நான் போரிட வேண்டும் (அவற்றின் மூலம் முஸ்லிம்களுக்கு என்மீதுள்ள வெறுப்பை நான் அகற்றிக்கொள்வேன்)” என்றார்கள். அதற்கும் நபி (ஸல்) “ஆகட்டும்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்புகள் :

அபூஸுஃப்யான் (ரலி) இவற்றைக் கோராமலிருந்தால், அவற்றை நபி (ஸல்) அவருக்குக் கொடுத்திருக்கமாட்டார்கள். ஏனெனில், நபி (ஸல்) தம்மிடம் எதைக் கேட்டாலும் “ஆகட்டும்!” என்றே கூறுவார்கள் என்று இதன் அறிவிப்பாளரான அபூஸுமைல் ஸிமாக் பின் அல்வலீத் (ரஹ்) கூறுகின்றார்.

ஸஹீஹ் முஸ்லிமின் விரிவுரையாளர் இமாம் முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ (ரஹ்) கூறுகின்றார் :

“சிக்கலான ஹதீஸ்களுள் இந்த ஹதீஸ் பிரபலமான ஒன்று. சிக்கலுக்குக் காரணம் அபூஸுஃப்யானின் கூற்று.

அபூஸுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டில் நிகழ்ந்த மக்கா வெற்றியின்போது என்பதில் எவருக்கும் வேறுபட்ட கருத்து இல்லை. ஆனால், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஹிஜ்ரீ 6(அ)7இல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அன்னை உம்மு ஹபீபாவை  மணம் புரிந்திருந்தார்கள். அந்த மண உடன்படிக்கை நிகழ்ந்தேறியது அன்னை உம்மு ஹபீபா, ஹபஷாவில் இருந்தபோது என்றும் ஹபஷாவிலிருந்து மதீனாவுக்கு வந்த பின்னர் என்றும் இரு வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன.

Share this Hadith: