அத்தியாயம்: 46, பாடம்: 6, ஹதீஸ் எண்: 4782

حَدَّثَنَا حَاجِبُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ كَانَ يَقُولُ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ وَيُنَصِّرَانِهِ وَيُمَجِّسَانِهِ كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ‏”‏ ‏.‏ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏{‏ فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَالنَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ‏}‏ الآيَةَ ‏‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، كِلاَهُمَا عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ ‏ “‏ كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً ‏”‏ ‏.‏ وَلَمْ يَذْكُرْ جَمْعَاءَ ‏

“ஒரு விலங்கு, முழு வளர்ச்சி பெற்ற (குட்டி) விலங்கைப் பெற்றெடுப்பதைப் போன்றே, எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் விலங்குக் குட்டிகள் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (ஓரிறை மார்க்கத்திலிருந்து திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, தீ வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்த பிறகு, நீங்கள் (உறுதிபெற) விரும்பினால், “… இது, மனிதர்களுக்கான அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் படைத்துள்ளான். அல்லாஹ்வின் படைத்தலில் எந்த மாற்றமும் இல்லை” எனும் (30:30) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒரு விலங்கு, (தன் குட்டி) விலங்கைப் பெற்றெடுத்ததைப் போன்றே” என்று இடம் பெற்றுள்ளது. “முழு வளர்ச்சி பெற்ற” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.