அத்தியாயம்: 46, பாடம்: 6, ஹதீஸ் எண்: 4784

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُلِدَ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ وَيُنَصِّرَانِهِ وَيُشَرِّكَانِهِ ‏”‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ لَوْ مَاتَ قَبْلَ ذَلِكَ قَالَ ‏”‏ اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ 


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ، نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي كِلاَهُمَا، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ فِي حَدِيثِ ابْنِ نُمَيْرٍ ‏”‏ مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلاَّ وَهُوَ عَلَى الْمِلَّةِ ‏”‏ ‏.‏ وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ عَنْ أَبِي مُعَاوِيَةَ ‏”‏ إِلاَّ عَلَى هَذِهِ الْمِلَّةِ حَتَّى يُبَيِّنَ عَنْهُ لِسَانُهُ ‏”‏ ‏.‏ وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ عَنْ أَبِي مُعَاوِيَةَ ‏”‏ لَيْسَ مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلاَّ عَلَى هَذِهِ الْفِطْرَةِ حَتَّى يُعَبِّرَ عَنْهُ لِسَانُهُ ‏”‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க் கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள்தாம் அவர்களை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ இணைவைப்பாளர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர்” என்று சொன்னார்கள்.

அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அதற்கு முன்னர் (அறியாப் பருவத்திலேயே) இறந்துவிட்டால், அதன் நிலை பற்றி என்ன சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “எல்லாக் குழந்தைகளும் (இயற்கை) மார்க்கத்தில் இருக்கும் நிலையில்தான் பிறக்கின்றன” என இடம்பெற்றுள்ளது.

அபூமுஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், “இந்த (இயற்கை) மார்க்கத்தில்தான் பிறக்கின்றன – அது, தன் நாவால் உறுதிப்படுத்தும்வரை” என்று காணப்படுகிறது.

அபூமூஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து அபூகுறைப் (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், “பிறக்கின்ற எந்தக் குழந்தையும் இந்த இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன; அதன் நாவு அதை வெளிப்படுத்தும்வரை” என்று காணப்படுகிறது.