حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ التُّسْتَرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ :
تَلاَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم { هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلاَّ اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُولُو الأَلْبَابِ} قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” إِذَا رَأَيْتُمُ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ فَأُولَئِكَ الَّذِينَ سَمَّى اللَّهُ فَاحْذَرُوهُمْ ”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(நபியே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். இதில் (பொருள்) உறுதி செய்யப்பட்ட வசனங்கள் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். (ஒரு சொல்லுக்குப்) பல பொருள்களுக்கு இடமளிக்கும் வேறுசில வசனங்களும் (இதில்) உள்ளன. உள்ளத்தில் கோளாறு உள்ளவர்கள், தம் விளக்கத்தை(ப் பிறரிடம்) திணித்துக் குழப்பம் செய்ய விரும்பியே அவ்வாறு செய்கின்றார்கள்.
ஆனால், அவற்றின் (மெய்ப்) பொருளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ந்த கூர்மதியாளர்கள், ‘நாங்கள் அவற்றை நம்புகிறோம்; (அவை) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதாம்’ எனக் கூறுவர். பகுத்தறிவாளர்களையன்றி (வேறு யாரும் இதை) உணர்வதில்லை” எனும் (3:7) இறை வசனத்தை ஓதிவிட்டு, “பல பொருள்களுக்கு இடமளிக்கும் வசனங்களைத் தேடிச் செல்வோரை நீங்கள் கண்டால், அவர்கள் எச்சரிக்கைக்கு உரியவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளவர்கள் (என்பதை அறிந்து), அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)