அத்தியாயம்: 47, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4797

حَدَّثَنَا أَبُو كَامِلٍ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ قَالَ كَتَبَ إِلَىَّ عَبْدُ اللَّهِ بْنُ رَبَاحٍ الأَنْصَارِيُّ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو قَالَ :‏ ‏

هَجَّرْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا – قَالَ – فَسَمِعَ أَصْوَاتَ رَجُلَيْنِ اخْتَلَفَا فِي آيَةٍ فَخَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعْرَفُ فِي وَجْهِهِ الْغَضَبُ فَقَالَ ‏ “‏ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِاخْتِلاَفِهِمْ فِي الْكِتَابِ ‏”‏ ‏

ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாக இருவர் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, “உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் நாசமாகினர்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)


குறிப்பு :

இதை அப்துல்லாஹ் பின் ரபாஹ் அல் அன்ஸாரீ (ரலி), தமக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் அபூ இம்ரான் அல்ஜவ்னீ (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 47, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4799

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ عَنْ جُنْدَبٍ، – يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا ‏”‏ ‏


حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا حَبَّانُ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ قَالَ قَالَ لَنَا جُنْدَبٌ وَنَحْنُ غِلْمَانٌ بِالْكُوفَةِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ اقْرَءُوا الْقُرْآنَ ‏”‏ ‏.‏ بِمِثْلِ حَدِيثِهِمَا

“உங்களின் உள்ளங்கள் ஒருமித்திருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள். கருத்து வேறுபட்டீர்களாயின் எழுந்துவிடுங்கள்”  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் (ரலி)


குறிப்பு :

ஹிப்பான் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் கூஃபாவில் இளைஞர்களாக இருந்தபோது எங்களிடம் ஜுன்தப் (ரலி), மேற்கண்டவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறியதாகச் சொன்னார்கள்” என்று அபூஇம்ரான் அல்ஜவ்னீ (ரஹ்) அறிவித்ததாகக் காணப்படுகிறது.

அத்தியாயம்: 47, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4798

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو قُدَامَةَ الْحَارِثُ بْنُ عُبَيْدٍ، عَنْ أَبِي عِمْرَانَ، عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ، قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ فَإِذَا اخْتَلَفْتُمْ فِيهِ فَقُومُوا ‏”‏

“உங்களின் உள்ளங்கள் ஒருமித்திருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) முரண்பாடு தோன்றினால் (அந்த இடத்தைவிட்டு) எழுந்துவிடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி)

அத்தியாயம்: 47, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4796

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ التُّسْتَرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

تَلاَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏{‏ هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلاَّ اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُولُو الأَلْبَابِ‏}‏ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِذَا رَأَيْتُمُ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ فَأُولَئِكَ الَّذِينَ سَمَّى اللَّهُ فَاحْذَرُوهُمْ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(நபியே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். இதில் (பொருள்) உறுதி செய்யப்பட்ட வசனங்கள் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். (ஒரு சொல்லுக்குப்) பல பொருள்களுக்கு இடமளிக்கும் வேறுசில வசனங்களும் (இதில்) உள்ளன. உள்ளத்தில் கோளாறு உள்ளவர்கள், தம் விளக்கத்தை(ப் பிறரிடம்) திணித்துக் குழப்பம் செய்ய விரும்பியே அவ்வாறு செய்கின்றார்கள்.

ஆனால், அவற்றின் (மெய்ப்) பொருளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ந்த கூர்மதியாளர்கள், ‘நாங்கள் அவற்றை நம்புகிறோம்; (அவை) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதாம்’ எனக் கூறுவர். பகுத்தறிவாளர்களையன்றி (வேறு யாரும் இதை) உணர்வதில்லை” எனும் (3:7)  இறை வசனத்தை ஓதிவிட்டு, “பல பொருள்களுக்கு இடமளிக்கும் வசனங்களைத் தேடிச் செல்வோரை நீங்கள் கண்டால், அவர்கள் எச்சரிக்கைக்கு உரியவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளவர்கள் (என்பதை அறிந்து), அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)