அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4838

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ أَبُو أَيُّوبَ الْغَيْلاَنِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، – يَعْنِي الْعَقَدِيَّ – حَدَّثَنَا عُمَرُ، – وَهُوَ ابْنُ أَبِي زَائِدَةَ – عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ قَالَ :‏

‏ “‏ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ عَشْرَ مِرَارٍ كَانَ كَمَنْ أَعْتَقَ أَرْبَعَةَ أَنْفُسٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ ‏”‏


وَقَالَ سُلَيْمَانُ حَدَّثَنَا أَبُو عَامِرٍ حَدَّثَنَا عُمَرُ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي السَّفَرِ عَنِ الشَّعْبِيِّ عَنْ رَبِيعِ بْنِ خُثَيْمٍ ‏.‏ بِمِثْلِ ذَلِكَ قَالَ فَقُلْتُ لِلرَّبِيعِ مِمَّنْ سَمِعْتَهُ قَالَ مِنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ – قَالَ – فَأَتَيْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ فَقُلْتُ مِمَّنْ سَمِعْتَهُ قَالَ مِنِ ابْنِ أَبِي لَيْلَى – قَالَ – فَأَتَيْتُ ابْنَ أَبِي لَيْلَى فَقُلْتُ مِمَّنْ سَمِعْتَهُ قَالَ مِنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ يُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்    (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்)’ என்று பத்து முறை ஓதுகின்றவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் நால்வரை (அடிமைத் தளையிலிருந்து) விடுதலை செய்தவரைப் போன்றவர் ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஅய்யூப் அல் அன்ஸாரீ (ரலி) வழியாக அம்ரு பின் மைமூன் (ரஹ்)


குறிப்பு :

“அம்ரு பின் மைமூன் (ரஹ்) அவர்களின் இந்தக் கூற்றை எனக்கு அறிவித்த ஸுலைமான் பின் உபைதில்லாஹ் (ரஹ்), மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதை அறிவித்துள்ளார். அதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷஅபீ (ரஹ்), ‘எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்களிடம், ‘இதை யாரிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்கள்?‘ என்று கேட்டேன். அதற்கவர், ‘அம்ரு பின் மைமூன் (ரஹ்) அவர்களிடமிருந்து’ என்று பதிலளித்தார். ஆகவே, நான் அம்ரு பின் மைமூன் (ரஹ்) அவர்களிடம் சென்று, ‘இதை யாரிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்கள்?‘ என்று கேட்டேன். அதற்கவர், ‘இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடமிருந்து‘ என்று பதிலளித்தார்.

ஆகவே, நான் இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடம் சென்று, ‘இதை யாரிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கவர், ‘இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னதாக அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்களிடமிருந்து (நான் செவியுற்றேன்)’ என்று சொன்னார். (ஆகவே, இது அம்ரு பின் மைமூன் (ரஹ்) அவர்களின் சொல்லன்று; நபி (ஸல்) அவர்களின் ஹதீஸாகும் என்று ஸுலைமான் பின் உபைதில்லாஹ் (ரஹ்) வழியாக, முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் உறுதிப்படுத்துகின்றேன்” என்று ஸஹீஹ் முஸ்லிம் நூலின் தொகுப்பாசிரியர் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith: