அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4840

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لأَنْ أَقُولَ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ أَحَبُّ إِلَىَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ ‏”‏

“ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன்  உதிக்கின்ற இ(ந்த உலகத்)தைவிட எனக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4845

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مَرْوَانُ، وَعَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُوسَى الْجُهَنِيِّ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُوسَى الْجُهَنِيُّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي قَالَ :‏

كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَكْسِبَ كُلَّ يَوْمٍ أَلْفَ حَسَنَةٍ ‏”‏ ‏.‏ فَسَأَلَهُ سَائِلٌ مِنْ جُلَسَائِهِ كَيْفَ يَكْسِبُ أَحَدُنَا أَلْفَ حَسَنَةٍ قَالَ ‏”‏ يُسَبِّحُ مِائَةَ تَسْبِيحَةٍ فَيُكْتَبُ لَهُ أَلْفُ حَسَنَةٍ أَوْ يُحَطُّ عَنْهُ أَلْفُ خَطِيئَةٍ ‏”‏ ‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருகில் இருந்தபோது அவர்கள், “உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியுமா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், “எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை (‘ஸுப்ஹானல்லாஹ்’ என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் பிழைகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4844

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا أَبُو مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم :‏

وَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَقُولُ حِينَ أَسْأَلُ رَبِّي قَالَ ‏”‏ قُلِ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَارْزُقْنِي ‏”‏ ‏.‏ وَيَجْمَعُ أَصَابِعَهُ إِلاَّ الإِبْهَامَ ‏”‏ فَإِنَّ هَؤُلاَءِ تَجْمَعُ لَكَ دُنْيَاكَ وَآخِرَتَكَ ‏”‏ ‏

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்), “அல்லாஹும்மஃக்ஃபிர்லீ, வர்ஹம்னீ, வ ஆஃபினீ, வர்ஸுக்னீ’ (இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை அளிப்பாயாக!) என்று சொல்வீராக” என்றார்கள்.

இதைக் கூறியபோது, தமது பெருவிரலைத் தவிர மற்ற விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக்கொண்டு, “இவை உம்முடைய இம்மை மறுமை அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடியவை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : தாரிக் பின் அஷ்யம் (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4843

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَزْهَرَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَبُو مَالِكٍ الأَشْجَعِيُّ، عَنْ أَبِيهِ، قَالَ :‏

كَانَ الرَّجُلُ إِذَا أَسْلَمَ عَلَّمَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم الصَّلاَةَ ثُمَّ أَمَرَهُ أَنْ يَدْعُوَ بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ ‏ “‏ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي ‏”‏ ‏

ஒருவர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவினால், அவருக்கு நபி (ஸல்) தொழுகையைக் கற்றுக்கொடுப்பார்கள். பிறகு “அல்லஹும்மஃக்பிர் லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வ ஆஃபினீ, வர்ஸுக்னீ” (பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக்  கருணை புரிவாயாக! என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக!) எனும் சொற்களைச் சொல்லிப் பிரார்த்திக்கும்படி கட்டளையிடுவார்கள்.

அறிவிப்பாளர் : தாரிக் பின் அஷ்யம் (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4842

حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، – يَعْنِي ابْنَ زِيَادٍ – حَدَّثَنَا أَبُو مَالِكٍ الأَشْجَعِيُّ عَنْ أَبِيهِ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُ مَنْ أَسْلَمَ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இஸ்லாத்தைத் தழுவுகின்றவருக்கு “அல்லாஹும்மஃக்ஃபிர் லீ வர்ஹம்னீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ (பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக; எனக்குக் கருணை புரிவாயாக; என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு வாழ்வாதராம் வழங்குவாயாக!) என்று (கூறுமாறு) கற்பிப்பார்கள்.

அறிவிப்பாளர் : தாரிக் பின் அஷ்யம் (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4841

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَابْنُ نُمَيْرٍ عَنْ مُوسَى الْجُهَنِيِّ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُوسَى الْجُهَنِيُّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ قَالَ :‏

جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عَلِّمْنِي كَلاَمًا أَقُولُهُ قَالَ ‏”‏ قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ ‏”‏ ‏.‏ قَالَ فَهَؤُلاَءِ لِرَبِّي فَمَا لِي قَالَ ‏”‏ قُلِ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي ‏”‏


قَالَ مُوسَى أَمَّا عَافِنِي فَأَنَا أَتَوَهَّمُ وَمَا أَدْرِي ‏.‏ وَلَمْ يَذْكُرِ ابْنُ أَبِي شَيْبَةَ فِي حَدِيثِهِ قَوْلَ مُوسَى ‏

கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் சொல்லிக்கொள்ள எனக்கு ஏதேனும் (துதிச்) சொற்களைக் கற்றுத்தாருங்கள்” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, ஸுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அஸீஸில் ஹகீம் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அல்லாஹ் மிகவும் பெரியவன். அவனைப் பெரியவன் எனப் பெருமைப்படுத்துகின்றேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன என அதிகமாகப் புகழ்கின்றேன். அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ் தூய்மையானவன். மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அல்லாஹ்வின் உதவியில்லாமல் வல்லமையோ சக்தியோ இல்லை) என்று சொல்வீராக!” என்று கூறினார்கள்.

அதற்கு அந்தக் கிராமவாசி, “இவை என் இறைவனுக்குரியவையாகும். எனக்குரியவை யாவை?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹும்மஃக்ஃபிர்லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ” என்று சொல்வீராக!” என்றார்கள். (பொருள்: இறைவா! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எனக்குக் கருணை புரிவாயாக. என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக!) என்று கற்றுக்கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்புகள் :

“வ ஆஃபினீ’ (எனக்கு ஆரோக்கியம் வழங்குவாயாக!) என்ற சொல்லும் இந்த ஹதீஸில் உள்ளதா என என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான மூஸா அல்ஜுஹனீ (ரஹ்) கூறுகின்றார்.

இப்னு அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், மூஸா அல்ஜுஹனீ (ரஹ்) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4839

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو كُرَيْبٍ وَمُحَمَّدُ بْنُ طَرِيفٍ الْبَجَلِيُّ قَالُوا حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ ‏”‏ ‏

“இரண்டு சொற்றொடர்கள், நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்கு விருப்பமானவையும் ஆகும் (அவை:)

ஸுஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கின்றேன்).

ஸுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கின்றேன்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4838

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ أَبُو أَيُّوبَ الْغَيْلاَنِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، – يَعْنِي الْعَقَدِيَّ – حَدَّثَنَا عُمَرُ، – وَهُوَ ابْنُ أَبِي زَائِدَةَ – عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ قَالَ :‏

‏ “‏ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ عَشْرَ مِرَارٍ كَانَ كَمَنْ أَعْتَقَ أَرْبَعَةَ أَنْفُسٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ ‏”‏


وَقَالَ سُلَيْمَانُ حَدَّثَنَا أَبُو عَامِرٍ حَدَّثَنَا عُمَرُ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي السَّفَرِ عَنِ الشَّعْبِيِّ عَنْ رَبِيعِ بْنِ خُثَيْمٍ ‏.‏ بِمِثْلِ ذَلِكَ قَالَ فَقُلْتُ لِلرَّبِيعِ مِمَّنْ سَمِعْتَهُ قَالَ مِنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ – قَالَ – فَأَتَيْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ فَقُلْتُ مِمَّنْ سَمِعْتَهُ قَالَ مِنِ ابْنِ أَبِي لَيْلَى – قَالَ – فَأَتَيْتُ ابْنَ أَبِي لَيْلَى فَقُلْتُ مِمَّنْ سَمِعْتَهُ قَالَ مِنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ يُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்    (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்)’ என்று பத்து முறை ஓதுகின்றவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் நால்வரை (அடிமைத் தளையிலிருந்து) விடுதலை செய்தவரைப் போன்றவர் ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஅய்யூப் அல் அன்ஸாரீ (ரலி) வழியாக அம்ரு பின் மைமூன் (ரஹ்)


குறிப்பு :

“அம்ரு பின் மைமூன் (ரஹ்) அவர்களின் இந்தக் கூற்றை எனக்கு அறிவித்த ஸுலைமான் பின் உபைதில்லாஹ் (ரஹ்), மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதை அறிவித்துள்ளார். அதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷஅபீ (ரஹ்), ‘எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்களிடம், ‘இதை யாரிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்கள்?‘ என்று கேட்டேன். அதற்கவர், ‘அம்ரு பின் மைமூன் (ரஹ்) அவர்களிடமிருந்து’ என்று பதிலளித்தார். ஆகவே, நான் அம்ரு பின் மைமூன் (ரஹ்) அவர்களிடம் சென்று, ‘இதை யாரிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்கள்?‘ என்று கேட்டேன். அதற்கவர், ‘இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடமிருந்து‘ என்று பதிலளித்தார்.

ஆகவே, நான் இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடம் சென்று, ‘இதை யாரிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கவர், ‘இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னதாக அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்களிடமிருந்து (நான் செவியுற்றேன்)’ என்று சொன்னார். (ஆகவே, இது அம்ரு பின் மைமூன் (ரஹ்) அவர்களின் சொல்லன்று; நபி (ஸல்) அவர்களின் ஹதீஸாகும் என்று ஸுலைமான் பின் உபைதில்லாஹ் (ரஹ்) வழியாக, முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் உறுதிப்படுத்துகின்றேன்” என்று ஸஹீஹ் முஸ்லிம் நூலின் தொகுப்பாசிரியர் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4837

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الأُمَوِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، عَنْ سُهَيْلٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ ‏.‏ لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ ‏”‏

“காலையிலும் மாலையிலும் நூறு முறை ‘ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி’ (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கின்றேன்) என்று சொல்கின்றவர் கொண்டுவருகின்ற(நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமை நாளில் கொண்டுவருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4836

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ ‏.‏ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ ‏.‏ كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أَحَدٌ أَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ ‏.‏ وَمَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமா(ன நன்மையா)கும்.

மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரிடமிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால், அல்லது மிகச் சிறந்த வேறொரு) நற்செயல் புரிந்தால் தவிர.

“ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” (அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கின்றேன்) என்று ஒரு நாளில் நூறு முறை சொல்பவருடைய தவறுகள், கடலின் நுரை போன்று (அதிகமாக) இருந்தாலும் அழிக்கப்படுகின்றன.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)