அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4841

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَابْنُ نُمَيْرٍ عَنْ مُوسَى الْجُهَنِيِّ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُوسَى الْجُهَنِيُّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ قَالَ :‏

جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عَلِّمْنِي كَلاَمًا أَقُولُهُ قَالَ ‏”‏ قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ ‏”‏ ‏.‏ قَالَ فَهَؤُلاَءِ لِرَبِّي فَمَا لِي قَالَ ‏”‏ قُلِ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي ‏”‏


قَالَ مُوسَى أَمَّا عَافِنِي فَأَنَا أَتَوَهَّمُ وَمَا أَدْرِي ‏.‏ وَلَمْ يَذْكُرِ ابْنُ أَبِي شَيْبَةَ فِي حَدِيثِهِ قَوْلَ مُوسَى ‏

கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் சொல்லிக்கொள்ள எனக்கு ஏதேனும் (துதிச்) சொற்களைக் கற்றுத்தாருங்கள்” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, ஸுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அஸீஸில் ஹகீம் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அல்லாஹ் மிகவும் பெரியவன். அவனைப் பெரியவன் எனப் பெருமைப்படுத்துகின்றேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன என அதிகமாகப் புகழ்கின்றேன். அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ் தூய்மையானவன். மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அல்லாஹ்வின் உதவியில்லாமல் வல்லமையோ சக்தியோ இல்லை) என்று சொல்வீராக!” என்று கூறினார்கள்.

அதற்கு அந்தக் கிராமவாசி, “இவை என் இறைவனுக்குரியவையாகும். எனக்குரியவை யாவை?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹும்மஃக்ஃபிர்லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ” என்று சொல்வீராக!” என்றார்கள். (பொருள்: இறைவா! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எனக்குக் கருணை புரிவாயாக. என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக!) என்று கற்றுக்கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்புகள் :

“வ ஆஃபினீ’ (எனக்கு ஆரோக்கியம் வழங்குவாயாக!) என்ற சொல்லும் இந்த ஹதீஸில் உள்ளதா என என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான மூஸா அல்ஜுஹனீ (ரஹ்) கூறுகின்றார்.

இப்னு அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், மூஸா அல்ஜுஹனீ (ரஹ்) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.

Share this Hadith: