அத்தியாயம்: 48, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4852

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، وَأَبُو مُعَاوِيَةَ عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى :‏

قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَجَعَلَ النَّاسُ يَجْهَرُونَ بِالتَّكْبِيرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ أَيُّهَا النَّاسُ ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ إِنَّكُمْ لَيْسَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا إِنَّكُمْ تَدْعُونَ سَمِيعًا قَرِيبًا وَهُوَ مَعَكُمْ ‏”‏ ‏.‏ قَالَ وَأَنَا خَلْفَهُ وَأَنَا أَقُولُ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ فَقَالَ ‏”‏ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ أَلاَ أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ ‏”‏ ‏.‏ فَقُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏”‏ قُلْ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ‏”‏


حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ جَمِيعًا عَنْ حَفْصِ بْنِ غِيَاثٍ عَنْ عَاصِمٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது மக்கள், “அல்லாஹு அக்பர்” (இறைவன் மிகப் பெரியவன்) என்று உரத்த குரலில் (தக்பீர்) கூறலாயினர். அப்போது நபி (ஸல்), “மக்களே! தன்னடக்கம் கொள்ளுங்கள்; மென்மையாகக் கூறுங்கள். (ஏனெனில்), நீங்கள் காது கேட்காதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. (மாறாக, நன்கு) செவியுறுவோனையும் அருகிலிருப்பவனையுமே அழைக்கின்றீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கின்றான்” என்று சொன்னார்கள்.

அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னாலிருந்துகொண்டு, “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் வல்லமையோ சக்தியோ இல்லை) என்று கூறிக்கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்), “அப்துல்லாஹ் பின் கைஸே! உங்களுக்குச் சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை நான் அறிவித்துத் தரட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (அறிவித்துத் தாருங்கள்), அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்), ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி)

Share this Hadith: