அத்தியாயம்: 48, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4853

حَدَّثَنَا أَبُو كَامِلٍ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ حَدَّثَنَا يَزِيدُ، – يَعْنِي ابْنَ زُرَيْعٍ – حَدَّثَنَا التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى :‏

أَنَّهُمْ كَانُوا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُمْ يَصْعَدُونَ فِي ثَنِيَّةٍ – قَالَ – فَجَعَلَ رَجُلٌ كُلَّمَا عَلاَ ثَنِيَّةً نَادَى لاَ إِلَهَ إِلاَ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ – قَالَ – فَقَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّكُمْ لاَ تُنَادُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا ‏”‏ ‏.‏ قَالَ فَقَالَ ‏”‏ يَا أَبَا مُوسَى – أَوْ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ – أَلاَ أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ كَنْزِ الْجَنَّةِ ‏”‏ ‏.‏ قُلْتُ مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏”‏ ‏


وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ نَحْوَهُ ‏

حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، وَأَبُو الرَّبِيعِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أَبِي مُوسَى، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ ‏.‏ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ عَاصِمٍ

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزَاةٍ ‏.‏ فَذَكَرَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ ‏ “‏ وَالَّذِي تَدْعُونَهُ أَقْرَبُ إِلَى أَحَدِكُمْ مِنْ عُنُقِ رَاحِلَةِ أَحَدِكُمْ ‏”‏ ‏.‏ وَلَيْسَ فِي حَدِيثِهِ ذِكْرُ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏‏

மக்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு மலைக் கணவாயில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் ஒவ்வொரு கணவாயில் ஏறும்போதும் “லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்“ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (உரத்த குரலில்) அழைக்கலானார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. (குரலைத் தாழ்த்துங்கள்)” என்று சொன்னார்கள்.

பிறகு “அபூமூஸா! (அ) அப்துல்லாஹ் பின் கைஸே!“ (என்றழைத்து), “சொர்க்கத்தின் கருவூலங்களின் ஒரு சொல்லை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (என்பதாகும்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி)


குறிப்புகள் :

அல் முஃதமர் (ரஹ்), தம் தந்தை வழியாக அறிவிப்பதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பயணத்தின்போது…” என்று ஆரம்பமாகிறது.

ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம் …” என்று ஆரம்பமாகிறது.

காலித் அல்-ஹதா (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குச் சென்றோம்…” என்று ஆரம்பமாகிறது. அதில் “நீங்கள் யாரை அழைக்கின்றீர்களோ அவன் உங்களுடைய வாகனப் பிராணியின் கழுத்தைவிட உங்களுக்கு மிகவும் அருகிலிருக்கின்றான்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்பில் “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” பற்றிய குறிப்பு இல்லை.

Share this Hadith: