அத்தியாயம்: 48, பாடம்: 17, ஹதீஸ் எண்: 4868

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ ‏ “‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا فَكَمْ مِمَّنْ لاَ كَافِيَ لَهُ وَلاَ مُئْوِيَ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) படுக்கைக்குச் செல்லும்போது “அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ ஸகானா வ கஃபானா வ ஆவானா. ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹு, வலா முஃவிய” என்று கூறுவார்கள்.

((பொருள்: அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே நமக்கு உணவளித்தான்; குடிநீர் வழங்கினான்; தன்னிறைவளிப்பதற்கோ தஞ்சமளிப்பதற்கோ ஆளில்லாமல் எத்தனையோ பேர் இருக்கின்போது (நமக்கு உறைவிடம் கொடுத்துத்) தஞ்சமளித்தான். (நம் தேவைகளை நிறைவேற்றி) போதுமான அளவுக்குக் கொடுத்தான்)).

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)