அத்தியாயம்: 48, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4834

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنِي ابْنَ عُلَيَّةَ – عَنْ عَبْدِ الْعَزِيزِ، – وَهُوَ ابْنُ صُهَيْبٍ – قَالَ سَأَلَ قَتَادَةُ أَنَسًا أَىُّ دَعْوَةٍ كَانَ يَدْعُو بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَكْثَرَ قَالَ :‏

كَانَ أَكْثَرُ دَعْوَةٍ يَدْعُو بِهَا يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ‏”‏ ‏.‏ قَالَ وَكَانَ أَنَسٌ إِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ بِدَعْوَةٍ دَعَا بِهَا فَإِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ بِدُعَاءٍ دَعَا بِهَا فِيهِ

கத்தாதா (ரஹ்), அனஸ் (ரலி) அவர்களிடம் “நபி (ஸல்) அதிகமாகக் கேட்டுவந்த பிரார்த்தனை எது?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) நபி (ஸல்) அதிகமாகக் கேட்டுவந்த பிரார்த்தனை, “அல்லாஹும்ம! ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந் நார் (இறைவா! இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) என்பதாகும்” என்று விடையளித்தார்கள்.

அனஸ் (ரலி) ஏதேனும் பிரார்த்தனை செய்ய நாடினால் இந்தப் பிரார்த்தனையையே செய்வார்கள். வேறு பிரார்த்தனைகள் செய்யும்போதும் இதைச் சேர்த்துக் கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்)

Share this Hadith: