அத்தியாயம்: 5, பாடம்: 11, ஹதீஸ் எண்: 847

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ :‏

‏أَنَّ نَفَرًا جَاءُوا إِلَى ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏قَدْ ‏ ‏تَمَارَوْا ‏ ‏فِي الْمِنْبَرِ مِنْ أَيِّ عُودٍ هُوَ فَقَالَ أَمَا وَاللَّهِ إِنِّي لَأَعْرِفُ مِنْ أَيِّ عُودٍ هُوَ وَمَنْ عَمِلَهُ وَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ قَالَ فَقُلْتُ لَهُ يَا ‏ ‏أَبَا عَبَّاسٍ ‏ ‏فَحَدِّثْنَا قَالَ أَرْسَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏امْرَأَةٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏إِنَّهُ لَيُسَمِّهَا يَوْمَئِذٍ ‏ ‏انْظُرِي ‏ ‏غُلَامَكِ ‏ ‏النَّجَّارَ يَعْمَلْ لِي ‏ ‏أَعْوَادًا أُكَلِّمُ النَّاسَ عَلَيْهَا فَعَمِلَ هَذِهِ الثَّلَاثَ دَرَجَاتٍ ثُمَّ أَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَوُضِعَتْ هَذَا الْمَوْضِعَ فَهِيَ مِنْ طَرْفَاءِ ‏ ‏الْغَابَةِ ‏ ‏وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ عَلَيْهِ فَكَبَّرَ وَكَبَّرَ النَّاسُ وَرَاءَهُ وَهُوَ عَلَى الْمِنْبَرِ ثُمَّ رَفَعَ فَنَزَلَ الْقَهْقَرَى حَتَّى سَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ ثُمَّ عَادَ حَتَّى فَرَغَ مِنْ آخِرِ صَلَاتِهِ ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا بِي وَلِتَعَلَّمُوا صَلَاتِي


حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدٍ الْقَارِيُّ الْقُرَشِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏أَنَّ ‏ ‏رِجَالًا أَتَوْا ‏ ‏سَهْلَ بْنَ سَعْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏قَالَ أَتَوْا ‏ ‏سَهْلَ بْنَ سَعْدٍ ‏ ‏فَسَأَلُوهُ مِنْ أَيِّ شَيْءٍ مِنْبَرُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَاقُوا الْحَدِيثَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ أَبِي حَازِمٍ ‏

ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து, “(நபியவர்களின் சொற்பொழிவு மேடை) மிம்பரை உருவாக்குவதற்குப் பயன்பட்ட மரம் எது?” என்று சர்ச்சையில் ஈடுபட்டனர். அப்போது ஸஹ்லு (ரலி), “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த மரத்தால் செய்யப்பட்டது? அதைச் செய்தவர் யார்? என்பதை நான் நன்கறிவேன். அதன்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  முதல்நாளில் அமர்ந்ததை நான் பார்த்திருக்கின்றேன்” என்று கூறினார்கள். நான், “அபூஅப்பாஸ் (ஸஹ்லிப்னு ஸஅத்) அவர்களே! அது பற்றி எங்களுக்கு(விவரமாக)ச் சொல்லுங்கள்” என்று வேண்டினேன். அப்போது அவர்கள்,

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பெண்மணிக்கு ஆளனுப்பி (அவரை வரவழைத்து), ‘நான் அமர்ந்து மக்களுக்கு உரையாற்றுவதற்காக உன் தச்சு வேலையாளிடம் எனக்காக மரச்சட்டங்களை(இணைத்து மிம்பர் ஒன்றை)ச் செய்யச் சொல்வாயாக!’ என்று கூறியதற்கு ஒப்ப, மூன்று படிகள் கொண்ட இந்த மிம்பரை அந்தத் தச்சர் செய்தார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உத்தரவுப்படி, அது (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) இந்த இடத்தில் வைக்கப்பட்டது. அது அல்ஃகாபாக் காட்டின் ஒருவகை சவுக்கு மரத்தால் செய்யப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த மேடைமீது (தொழுவதற்காக) நின்று தக்பீர் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்து மக்கள் தக்பீர் கூறினர். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்ததும் திரும்பாமல் அப்படியே பின்வாக்கில் இறங்கி அந்த மேடையின் கீழ்ப் பகுதி(க்கருகில் தரையில்) சஜ்தாச் செய்தார்கள். பிறகு முன்போன்றே மீண்டும் (அந்த மேடையில் ஏறியும் இறங்கியும்) இறுதிவரை தொழுதார்கள். பின்னர் மக்களை முன்னோக்கி, ‘மக்களே! நீங்கள் என்னைப் பின்பற்றவும் எனது தொழுகையை நீங்கள் கற்றுக் கொள்ளவுமே இவ்வாறு நான் செய்தேன்’ என்று விளக்கினார்கள்” என்று ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி)


குறிப்பு :

அபூஹாஸிம் வழி அறிவிப்பு, “… மக்கள் (சிலர்) ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி) அவர்களிடம் வந்து, நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எந்த மரத்தால் செய்யப்பட்டது? என்று கேட்டனர் …” என்று தொடங்குகிறது. இடையில், தச்சரின் எஜமானியான அப்பெண்ணின் பெயரை ஸஹ்லு (ரலி) குறிப்பிட்டதாகவும் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment