அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 893

‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَزَادَ أَوْ نَقَصَ قَالَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏وَالْوَهْمُ مِنِّي ‏ ‏فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ أَزِيدَ فِي الصَّلَاةِ شَيْءٌ فَقَالَ ‏ ‏إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ ‏ ‏أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ ثُمَّ تَحَوَّلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَجَدَ سَجْدَتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒருபோது) எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதில் அவர்கள் கூட்டியோ குறைத்தோ தொழவைத்துவிட்டார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) ஏதேனும் அதிகமாக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன். ஆகவே, உங்களில் ஒருவர் (தொழுகையில்) மறந்துவிட்டால் அதே இருப்பில் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று கூறிவிட்டுப் பிறகு (கிப்லாவை நோக்கித்) திரும்பி இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் பின் ஸுவைத் (ரஹ்), “(கூட்டினார்களா குறைத்தார்களா என்பதில்) ஐயம் எனக்கு ஏற்பட்டதுதான்” என்று கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment