و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ أَنَّهُ صَلَّى بِهِمْ خَمْسًا ح حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ وَاللَّفْظُ لَهُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ قَالَ صَلَّى بِنَا عَلْقَمَةُ الظُّهْرَ خَمْسًا فَلَمَّا سَلَّمَ قَالَ الْقَوْمُ يَا أَبَا شِبْلٍ قَدْ صَلَّيْتَ خَمْسًا قَالَ كَلَّا مَا فَعَلْتُ قَالُوا بَلَى قَالَ وَكُنْتُ فِي نَاحِيَةِ الْقَوْمِ وَأَنَا غُلَامٌ فَقُلْتُ بَلَى قَدْ صَلَّيْتَ خَمْسًا قَالَ لِي وَأَنْتَ أَيْضًا يَا أَعْوَرُ تَقُولُ ذَاكَ قَالَ قُلْتُ نَعَمْ قَالَ فَانْفَتَلَ فَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ :
صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسًا فَلَمَّا انْفَتَلَ تَوَشْوَشَ الْقَوْمُ بَيْنَهُمْ فَقَالَ مَا شَأْنُكُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ زِيدَ فِي الصَّلَاةِ قَالَ لَا قَالُوا فَإِنَّكَ قَدْ صَلَّيْتَ خَمْسًا فَانْفَتَلَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ قَالَ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَنْسَى كَمَا تَنْسَوْنَ
وَزَادَ ابْنُ نُمَيْرٍ فِي حَدِيثِهِ فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு (ஒருபோது) ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது மக்கள் தமக்கிடையே முணுமுணுத்துக் கொண்டனர். அப்போது நபி (ஸல்), “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) அதிகமாக்கப்பட்டு விட்டதா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இல்லை” என்றார்கள். “அவ்வாறாயின் நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்துவிட்டீர்களே?” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அப்படியே) திரும்பி இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பிறகு ஸலாம் கொடுத்தார்கள். மேலும், “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
குறிப்பு :
இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களில் ஒருவர் (தமது தொழுகையில்) மறந்து விட்டால் அவர் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.
ஹஸன் இப்னு உபைதுல்லாஹ் வழி அறிவிப்பில், “… நபி (ஸல்) மக்களுக்கு (மறதியாக) ஐந்து ரக்அத்கள் தொழுவித்துவிட்டார்கள் …” என்று இடம்பெற்றுள்ளது.
அல்கமா (ரஹ்) எங்களுக்கு (ஒரு) லுஹ்ருத் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்தபோது (அவர்களிடம்) மக்கள், “அபூஷிப்லே! நீங்கள் ஐந்து ரக்அத் தொழுவித்து விட்டீர்கள்” என்று கூறினர். அதற்கு அல்கமா (ரஹ்), “இல்லை; அவ்வாறு நான் செய்யவில்லை” என்று மறுத்தார்கள். மக்கள், “ஆம் (அவ்வாறுதான் செய்தீர்கள்)” என்று கூறினர். அப்போது சிறுவனாயிருந்த நான் கூட்டத்தின் ஓரத்தில் இருந்து கொண்டிருந்தேன். நானும், “ஆம் நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்து விட்டீர்கள்” என்று கூறினேன். அல்கமா (ரஹ்) அவர்கள் என்னைப் பார்த்து, “மாறுகண்ணா! நீயுமா இவ்வாறு கூறுகிறாய்?” என்று கேட்டார்கள். நான், “ஆம்!” என்றேன். உடனே அவர்கள் அப்படியே திரும்பி இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாக மேற்கண்ட ஹதீஸைக் கூறினார்கள் என்று இப்ராஹீம் பின் ஸுவைத் (ரஹ்) குறிப்பிடுகிறார்.