அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 895

‏و حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏

‏صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِمَّا ‏ ‏زَادَ أَوْ نَقَصَ قَالَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏وَايْمُ اللَّهِ مَا جَاءَ ذَاكَ إِلَّا مِنْ قِبَلِي ‏ ‏قَالَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ فَقَالَ لَا قَالَ فَقُلْنَا لَهُ الَّذِي صَنَعَ فَقَالَ ‏ ‏إِذَا زَادَ الرَّجُلُ أَوْ نَقَصَ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ قَالَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதோம். அப்போது அவர்கள் (ரக்அத்தைக்) கூட்டிவிட்டார்கள் அல்லது குறைத்துவிட்டார்கள்.

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதேனும் வந்துவிட்டதா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர்களிடம் அவர்கள் செய்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “ஒருவர் (தமது தொழுகையில்) கூட்டிவிட்டாலோ குறைத்துவிட்டாலோ அவர் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று சொல்லிவிட்டுப் பிறகு (தாம் மறந்துவிட்டதற்காக) இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு:

“அல்லாஹ்வின் மீதாணையாக! கூட்டினார்களா குறைத்தார்களா என்ற ஐயப்பாடு எனது தரப்பிலிருந்து ஏற்பட்டதேயாகும்” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் பின் ஸுவைத் (ரஹ்) கூறியுள்ளார்.

Share this Hadith:

Leave a Comment