و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ عَنْ أَبِي رَافِعٍ قَالَ :
رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ يَسْجُدُ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَقُلْتُ تَسْجُدُ فِيهَا فَقَالَ نَعَمْ رَأَيْتُ خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا فَلَا أَزَالُ أَسْجُدُ فِيهَا حَتَّى أَلْقَاهُ
قَالَ شُعْبَةُ قُلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ
அபூஹுரைரா (ரலி) ‘இதஸ்ஸமாஉன் ஷக்கத் … (எனத் தொடங்கும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்ததை நான் கண்டேன். அப்போது நான் அவர்களிடம், “இ(தை ஓதிய)தற்காக ஸஜ்தாச் செய்கின்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! என் உற்ற தோழர் இதை ஓதி ஸஜ்தாச் செய்ததை நான் கண்டேன். நான் (மரணித்து) அவர்களைச் சந்திக்கும்வரை (அதை ஓதும்போது) ஸஜ்தாச் செய்வேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூராஃபிஉ (ரஹ்)
குறிப்பு :
அதாஉ பின் அபீமைமூனா (ரஹ்) அவர்களிடம், “உற்ற தோழர் எனக் குறிப்பிட்டது நபி (ஸல்) அவர்களைத்தானே?” என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், “ஆம்” என்றனர் என்பதாக ஷுஅபா (ரஹ்) கூறினார்.