அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 908

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏قَالَ ‏

رَأَيْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَسْجُدُ فِي ‏ ‏إِذَا السَّمَاءُ انْشَقَّتْ ‏ ‏فَقُلْتُ تَسْجُدُ فِيهَا فَقَالَ نَعَمْ رَأَيْتُ خَلِيلِي ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْجُدُ فِيهَا فَلَا أَزَالُ أَسْجُدُ فِيهَا حَتَّى أَلْقَاهُ ‏

قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏قُلْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ نَعَمْ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் ‘இதஸ்ஸமாஉன் ஷக்கத் … (எனத் தொடங்கும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்ததை நான் கண்டேன். அப்போது நான் அவர்களிடம், “இ(தை ஓதிய)தற்காக ஸஜ்தாச் செய்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! என் உற்ற தோழர் இதை ஓதி ஸஜ்தாச் செய்ததை நான் கண்டேன். நான் (மரணித்து) அவர்களைச் சந்திக்கும்வரை (அதை ஓதும்போது) ஸஜ்தாச் செய்வேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூராஃபிஉ (ரஹ்)

குறிப்பு :

அதாஉ பின் அபீமைமூனா (ரஹ்) அவர்களிடம், “உற்ற தோழர் எனக் குறிப்பிட்டது நபி (ஸல்) அவர்களைத்தாமே?” என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், “ஆம்” என்றனர் என்பதாக ஷுஅபா (ரஹ்) கூறினார்.

அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 907

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏قَالَ ‏

صَلَّيْتُ مَعَ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏صَلَاةَ ‏ ‏الْعَتَمَةِ ‏ ‏فَقَرَأَ ‏ ‏إِذَا السَّمَاءُ انْشَقَّتْ ‏ ‏فَسَجَدَ فِيهَا فَقُلْتُ لَهُ مَا هَذِهِ السَّجْدَةُ فَقَالَ سَجَدْتُ بِهَا خَلْفَ ‏ ‏أَبِي الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَا أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ ‏

و قَالَ ‏ ‏ابْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏فَلَا أَزَالُ أَسْجُدُهَا ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمُ بْنُ أَخْضَرَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏التَّيْمِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُمْ لَمْ يَقُولُوا خَلْفَ ‏ ‏أَبِي الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷாத் தொழுகையைத் தொழுதேன். அவர்கள் ‘இதஸ்ஸமாஉன் ஷக்கத்’ (எனத் தொடங்கும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி (ஸஜ்தா வசனம் வந்தவுடன்) அதில் ஸஜ்தாச் செய்தார்கள். நான் அவர்களிடம் “இது என்ன?” என்று கேட்டேன் அதற்கு அவர்கள், “நான் அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதபோது தொழுகையில்) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய)தற்காக ஸஜ்தாச் செய்திருக்கிறேன். அவர்களை நான் (மரணித்து) சந்திக்கும்வரை (அதை ஓதும்போது) ஸஜ்தாச் செய்வேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூராஃபிஉ (ரஹ்)

குறிப்பு :

அத்தைமீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அபுல்காசிம் அவர்களுக்குப் பின்னால் …” எனும் சொல் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 906

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏صَفْوَانَ بْنِ سُلَيْمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ‏ ‏مَوْلَى ‏ ‏بَنِي مَخْزُومٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

سَجَدَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏إِذَا السَّمَاءُ انْشَقَّتْ ‏ ‏وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ ‏

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இதஸ்மாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது அத்தியாயம்), ‘இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க’ (எனும் 96ஆவது அத்தியாயம்) ஆகியவற்றை ஓதியபோது ஸஜ்தாச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 905

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ بْنِ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ مِينَاءَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

سَجَدْنَا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏إِذَا السَّمَاءُ انْشَقَّتْ ‏ ‏وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ

நாங்கள் ‘இதஸ்மாஉன் ஷக்கத்’ (84), ‘இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க’ (96) ஆகிய அத்தியாயங்களில் நபி (ஸல்) அவர்களுடன் ஸஜ்தாச் செய்தோம்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 904

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ ‏ ‏مَوْلَى ‏ ‏الْأَسْوَدِ بْنِ سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏

أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَرَأَ لَهُمْ ‏ ‏إِذَا السَّمَاءُ انْشَقَّتْ ‏ ‏فَسَجَدَ فِيهَا فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَجَدَ فِيهَا ‏

و حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ مُوسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகையில்) எங்களுக்கு ‘இதஸ்ஸமாஉன் ஷக்கத்’ எனும் (84ஆவது) அத்தியாயத்தை ஓதி அதில் (ஸஜ்தா வசனம் 21 வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். அவர்கள் தொழுது முடித்துத் திரும்பியபின், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியபோது ஸஜ்தாச் செய்தார்கள்” எனத் தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 903

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ خُصَيْفَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ قُسَيْطٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏أَنَّهُ أَخْبَرَهُ ‏

أَنَّهُ سَأَلَ ‏ ‏زَيْدَ بْنَ ثَابِتٍ ‏ ‏عَنْ الْقِرَاءَةِ مَعَ الْإِمَامِ فَقَالَ لَا قِرَاءَةَ مَعَ الْإِمَامِ فِي شَيْءٍ وَزَعَمَ ‏ ‏أَنَّهُ قَرَأَ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالنَّجْمِ إِذَا هَوَى ‏ ‏فَلَمْ يَسْجُدْ

நான் ஸைத் பின் தாபித் (ரலி) அவர்களிடம் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் கிராஅத் ஓதுவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “இமாமைப் பின்பற்றித் தொழுபவருக்கு ஓதுதல் (கிராஅத்) ஏதும் கிடையாது” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் கூறும்போது, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘வந்நஜ்மி இதா ஹவா’ (எனத் தொடங்கும் 53ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அதற்காக அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் தாபித் (ரலி) வழியாக அதாஉ பின் யஸார் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 902

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْأَسْوَدَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَرَأَ ‏ ‏وَالنَّجْمِ ‏ ‏فَسَجَدَ فِيهَا وَسَجَدَ مَنْ كَانَ مَعَهُ غَيْرَ أَنَّ ‏ ‏شَيْخًا ‏ ‏أَخَذَ كَفًّا مِنْ حَصًى أَوْ تُرَابٍ فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ وَقَالَ يَكْفِينِي هَذَا ‏

قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا

நபி (ஸல்) அவர்கள் அந்நஜ்மு எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதியபின் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள் ஆகிய) அனைவரும் (நிலத்தில்) ஸஜ்தாச் செய்தனர். அங்கிருந்த ஒரு வயோதின் மட்டும் ஒரு கையளவு கூழாங்கற்களை/மண்ணை அள்ளித் தனது நெற்றிவரை கொண்டுசென்றுவிட்டு, ‘இது எனக்குப் போதும்’ என்று (ஸஜ்தாவைக் கேலி செய்து) சொன்னான். பிறகு அ(க்கிழ)வன் இறைமறுப்பாளனாகவே (பத்ருப் போரில்) கொல்லப்பட்டதை நான் கண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 901

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏

عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏رُبَّمَا قَرَأَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْقُرْآنَ فَيَمُرُّ بِالسَّجْدَةِ فَيَسْجُدُ بِنَا حَتَّى ازْدَحَمْنَا عِنْدَهُ حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَكَانًا لِيَسْجُدَ فِيهِ فِي غَيْرِ صَلَاةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில நேரங்களில் குர்ஆன் ஓதி ஸஜ்தா வசனத்தைக் கடந்து செல்கையில் எங்களுடன் சேர்ந்து ஸஜ்தாச் செய்வார்கள். அப்போது இட நெருக்கடி ஏற்பட்டு எங்களில் ஒருசிலருக்கு ஸஜ்தாச் செய்யக்கூட இடம் கிடைக்காது. தொழுகை அல்லாத நேரங்களில் இவ்வாறு நடைபெற்றது.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 900

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى الْقَطَّانِ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَقْرَأُ الْقُرْآنَ فَيَقْرَأُ سُورَةً فِيهَا سَجْدَةٌ فَيَسْجُدُ وَنَسْجُدُ مَعَهُ حَتَّى مَا يَجِدُ بَعْضُنَا مَوْضِعًا لِمَكَانِ جَبْهَتِهِ

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஸஜ்தா வசனமுள்ள அத்தியாயத்தை (எங்களுக்கு) ஓதிக் காட்டும்போது அவர்கள் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வார்கள். உடனே நாங்களும் சிரவணக்கம் செய்வோம். அப்போது (ஏற்படும் இட நெருக்கடியால்) எங்களில் சிலருக்கு நெற்றி வைக்கக்கூட இடம் கிடைக்காது.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)