حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ :
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ قَالَتْ فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنْ الْمَغْرَمِ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில்,
“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபில் கப்ரி (இறைவா! உன்னிடம் நான் மண்ணறையின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகின்றேன்),
வஅஊது பிக மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி (மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்),
வஅஊது பிக மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி, (வாழும்போதும் இறக்கும்போதும் ஏற்படும் சோதனையிலுருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன்),
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் மஅஸமி வல்மஃக்ரம் (இறைவா! பாவத்திலிருந்தும் கடன்படுவதிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்)”
என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். “நீங்கள் கடன் படுவதிலிருந்து (இவ்வளவு) அதிகமாகப் பாதுகாப்புக் கோரக் காரணம் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று யாரோ ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்), “ஒருவன் கடன்பட்டுவிட்டால் (திருப்பிச் செலுத்த முடியாதபோது) பொய் பேசுகின்றான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)