و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُهُمْ السُّورَةَ مِنْ الْقُرْآنِ يَقُولُ قُولُوا اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
قَالَ مُسْلِم بْن الْحَجَّاج بَلَغَنِي أَنَّ طَاوُسًا قَالَ لِابْنِهِ أَدَعَوْتَ بِهَا فِي صَلَاتِكَ فَقَالَ لَا قَالَ أَعِدْ صَلَاتَكَ لِأَنَّ طَاوُسًا رَوَاهُ عَنْ ثَلَاثَةٍ أَوْ أَرْبَعَةٍ أَوْ كَمَا قَالَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுக்குக் குர்ஆனின் ஓர் அத்தியாயத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போன்று இந்தப் பிரார்த்தனையைக் கற்றுக் கொடுத்தார்கள் :
“அல்லாஹும்ம இன்னா நஊது பிக மின் அதாபி ஜஹன்னம (இறைவா, உன்னிடம் நாங்கள் நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகின்றோம்),
வஅஊது பிக மின் அதாபில் கப்ரி (மண்ணறையின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகின்றேன்),
வ அஊது பிக மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி (மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன்),
வ அஊது பிக மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத் (வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின்போது ஏற்படும் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்) என்று பிரார்த்தியுங்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)
குறிப்பு :
தாவூஸ் (ரஹ்) தம் மகனிடம், “உனது தொழுகையில் நீ இவ்வாறு பிரார்த்தித்தாயா?” என்று கேட்டார். அதற்கு அவருடைய மகன் “இல்லை” என்றார். அதற்கு தாவூஸ் (ரஹ்), “தொழுகையை மீண்டும் தொழுவாயாக!” என்று கூறினார் என எனக்குத் தகவல் கிடைத்தது. ஏனெனில், இதை தாவூஸ் (ரஹ்) மூன்று/நான்கு அறிவிப்பாளர்களிடமிருந்து அறிவித்துள்ளார் என இந்நூலாசிரியர் இமாம் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்.