حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ :
أُقِيمَتْ الصَّلَاةُ فَقُمْنَا فَعَدَّلْنَا الصُّفُوفَ قَبْلَ أَنْ يَخْرُجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا قَامَ فِي مُصَلَّاهُ قَبْلَ أَنْ يُكَبِّرَ ذَكَرَ فَانْصَرَفَ وَقَالَ لَنَا مَكَانَكُمْ فَلَمْ نَزَلْ قِيَامًا نَنْتَظِرُهُ حَتَّى خَرَجَ إِلَيْنَا وَقَدْ اغْتَسَلَ يَنْطُفُ رَأْسُهُ مَاءً فَكَبَّرَ فَصَلَّى بِنَا
தொழுகைக்காக (ஒரு முறை) இகாமத் சொல்லப்பட்டது. உடனே நாங்கள் எழுந்து நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் வருவதற்கு முன்பே தொழுகை வரிசைகளைச் சீராக்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து, தொழு(கை நடத்து)ம் இடத்தில் போய் நின்றார்கள். தொடக்க தக்பீர் சொல்வதற்குமுன் (தாம் குளிக்க வேண்டி இருப்பது) அவர்களுக்கு நினைவுக்கு வரவே எங்களிடம், “உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்” என்று கூறிவிட்டுத்(தமது இல்லத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் வரும்வரை நாங்கள் அவர்களை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தோம். பிறகு அவர்கள் குளித்துவிட்டுத் தமது தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட எங்களிடம் வந்தார்கள். தக்பீர் சொல்லி எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)