அத்தியாயம்: 5, பாடம்: 30, ஹதீஸ் எண்: 951

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَمْرٍو يَعْنِي الْأَوْزَاعِيَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏‏

أُقِيمَتْ الصَّلَاةُ وَصَفَّ النَّاسُ صُفُوفَهُمْ وَخَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَامَ مَقَامَهُ ‏ ‏فَأَوْمَأَ ‏ ‏إِلَيْهِمْ بِيَدِهِ أَنْ مَكَانَكُمْ فَخَرَجَ وَقَدْ اغْتَسَلَ وَرَأْسُهُ ‏ ‏يَنْطُفُ ‏ ‏الْمَاءَ فَصَلَّى بِهِمْ

தொழுகைக்காக (ஒரு முறை) இகாமத் சொல்லப்பட்டது. மக்கள் தம் தொழுகை வரிசைகளில் நின்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறப்பட்டுவந்து தமது (தொழுகை நடத்தும்) இடத்தில் நின்றார்கள். (பிறகு தாம் குளிக்கவேண்டி இருப்பது அவர்களுக்கு நினைவுக்கு வரவே) ‘அப்படியே இருங்கள்’ என்று மக்களை நோக்கிச் சைகை செய்த பிறகு (தமது இல்லத்திற்குச் சென்று) குளித்து விட்டுத் தமது தலையிலிருந்து தண்ணீர் சொட்ட சொட்ட வந்து மக்களுக்குத் தொழுவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment