அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 971

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَدْرُ بْنُ عُثْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ أَتَاهُ سَائِلٌ يَسْأَلُهُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ شَيْئًا قَالَ فَأَقَامَ الْفَجْرَ حِينَ انْشَقَّ الْفَجْرُ وَالنَّاسُ لَا يَكَادُ يَعْرِفُ بَعْضُهُمْ بَعْضًا ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ بِالظُّهْرِ حِينَ ‏ ‏زَالَتْ ‏ ‏الشَّمْسُ وَالْقَائِلُ يَقُولُ قَدْ انْتَصَفَ النَّهَارُ وَهُوَ كَانَ أَعْلَمَ مِنْهُمْ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ بِالْعَصْرِ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ بِالْمَغْرِبِ حِينَ وَقَعَتْ الشَّمْسُ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ ثُمَّ أَخَّرَ الْفَجْرَ مِنْ الْغَدِ حَتَّى انْصَرَفَ مِنْهَا وَالْقَائِلُ يَقُولُ قَدْ طَلَعَتْ الشَّمْسُ أَوْ كَادَتْ ثُمَّ أَخَّرَ الظُّهْرَ حَتَّى كَانَ قَرِيبًا مِنْ وَقْتِ الْعَصْرِ بِالْأَمْسِ ثُمَّ أَخَّرَ الْعَصْرَ حَتَّى انْصَرَفَ مِنْهَا وَالْقَائِلُ يَقُولُ قَدْ احْمَرَّتْ الشَّمْسُ ثُمَّ أَخَّرَ الْمَغْرِبَ حَتَّى كَانَ عِنْدَ سُقُوطِ الشَّفَقِ ثُمَّ أَخَّرَ الْعِشَاءَ حَتَّى كَانَ ثُلُثُ اللَّيْلِ الْأَوَّلِ ثُمَّ أَصْبَحَ فَدَعَا السَّائِلَ فَقَالَ ‏ ‏الْوَقْتُ بَيْنَ هَذَيْنِ ‏

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏بَدْرِ بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى ‏ ‏سَمِعَهُ مِنْهُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ سَائِلًا أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَهُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَصَلَّى الْمَغْرِبَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ فِي الْيَوْمِ الثَّانِي

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தொழுகையின் நேரங்கள் குறித்து வினவினார். அப்போது அவருக்கு நபி (ஸல்) (வாய்மொழியாக) பதிலேதும் கூறவில்லை. வைகறைப் பொழுது புலர்ந்ததும் ஃபஜ்ருத் தொழுகைக்காக இகாமத் (கூறச்) சொன்னார்கள். அப்போது (இருள் இருந்த காரணத்தால்) மக்களில் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள இயலவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (லுஹ்ருத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் லுஹ்ருத் தொழுகைக்காக பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னார்கள். அப்போது ஒருவர், “நண்பகலாகிவிட்டது” என்று கூறினார். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எல்லாரையும்விட அறிந்தவர்களாக இருந்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (அஸ்ருத் தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் சூரியன் (சாயாமல்) உயர்ந்திருக்கும்போதே அஸ்ருத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (மஃக்ரிபுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி), சூரியன் மறைந்தபோது மஃக்ரிபுத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (இஷாத் தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி), செம்மேகம் மறைந்தபோது இஷாத் தொழுகைக்கு இகாமத் சொன்னார்கள்.

மறுநாள், “சூரியன் உதிக்கப்போகிறது” அல்லது “சூரியன் உதித்துவிட்டது” என்று ஒருவர் கூறுமளவுக்கு நபி (ஸல்) ஃபஜ்ருத் தொழுகையைப் பிற்படுத்தித் தொழுதார்கள். பிறகு லுஹ்ருத் தொழுகையைப் பிற்படுத்தித் தொழுதார்கள். அது முந்திய நாள் அஸ்ருத் தொழுத நேரத்திற்கு நெருக்கமாக இருந்தது. பிறகு அஸ்ருத் தொழுகையை முடித்துத் திரும்பியபோது ஒருவர் “சூரியன் சிவந்து விட்டது” எனக் கூறுமளவுக்குப் பிற்படுத்தித் தொழுதார்கள்.

பிறகு மஃக்ரிபுத் தொழுகையைச் செம்மேகம் மறையும்வரை பிற்படுத்தினார்கள். பிறகு இஷாத் தொழுகையை இரவின் முந்திய மூன்றிலொரு பகுதி நேரமாகும்வரை பிற்படுத்தினார்கள். விடிந்ததும், வினவிய மனிதரை அழைத்து, “இவ்விரு (நாட்களின் தொழுகை) நேரங்களுக்கும் இடைப்பட்ட நேரமே (ஐவேளைத் தொழுகைகளின்) நேரமாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 970

و حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ السَّامِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَرَمِيُّ بْنُ عُمَارَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏

أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَهُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ فَقَالَ ‏ ‏اشْهَدْ مَعَنَا الصَّلَاةَ فَأَمَرَ ‏ ‏بِلَالًا ‏ ‏فَأَذَّنَ ‏ ‏بِغَلَسٍ ‏ ‏فَصَلَّى الصُّبْحَ حِينَ طَلَعَ الْفَجْرُ ثُمَّ أَمَرَهُ بِالظُّهْرِ حِينَ ‏ ‏زَالَتْ ‏ ‏الشَّمْسُ عَنْ بَطْنِ السَّمَاءِ ثُمَّ أَمَرَهُ بِالْعَصْرِ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ثُمَّ أَمَرَهُ بِالْمَغْرِبِ حِينَ وَجَبَتْ الشَّمْسُ ثُمَّ أَمَرَهُ بِالْعِشَاءِ حِينَ وَقَعَ الشَّفَقُ ثُمَّ أَمَرَهُ ‏ ‏الْغَدَ ‏ ‏فَنَوَّرَ ‏ ‏بِالصُّبْحِ ثُمَّ أَمَرَهُ بِالظُّهْرِ فَأَبْرَدَ ثُمَّ أَمَرَهُ بِالْعَصْرِ وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ لَمْ تُخَالِطْهَا صُفْرَةٌ ثُمَّ أَمَرَهُ بِالْمَغْرِبِ قَبْلَ أَنْ يَقَعَ الشَّفَقُ ثُمَّ أَمَرَهُ بِالْعِشَاءِ عِنْدَ ذَهَابِ ثُلُثِ اللَّيْلِ ‏ ‏أَوْ بَعْضِهِ شَكَّ ‏ ‏حَرَمِيٌّ ‏ ‏فَلَمَّا أَصْبَحَ قَالَ أَيْنَ السَّائِلُ مَا بَيْنَ مَا رَأَيْتَ وَقْتٌ

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தொழுகை நேரங்கள் குறித்து வினவினார். (அவரிடம்) நபி (ஸல்), “நம்முடன் தொழுகையில் கலந்துகொள்வீராக!” என்று கூறினார்கள். இதையடுத்து நபி (ஸல்), பிலால் (ரலி) அவர்களிடம் (இருள் மீந்து இருக்கும்போதே ஸுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட பிலால் (ரலி), இருள் மீந்து இருக்கும்போதே (ஸுப்ஹுத் தொழுகைக்காக) பாங்கு சொன்னார்கள். வைகறைப் பொழுது உதயமாகும்போது நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுதார்கள். பிறகு சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது லுஹ்ருத் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பின்னர் சூரியன் (சாயாமல்) உயர்ந்திருக்கும்போதே அஸ்ருத் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் சொல்லுமாறு) பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு சூரியன் மறைந்தபோது மஃக்ரிப் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பிறகு செம்மேகம் மறைந்ததும் இஷாத் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள்.

மறுநாள் பிலால் (ரலி) அவர்களிடம் (ஸுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு, வெளிச்சம் வந்தபின் ஸுப்ஹுத் தொழுதார்கள். பிறகு லுஹ்ருத் தொழுகைக்கு (வெப்பம் தணிந்தபின் பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு, வெப்பம் தணிந்தபின் தொழுதார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் அஸ்ருத் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு, சூரியன் மஞ்சள்நிறம் பெறாமல் ஒளிமிக்கதாகவும் தெளிவாகவும் இருந்தபோது அஸ்ருத் தொழுதார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் செம்மேகம் மறைவதற்குமுன் மஃக்ரிப் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பிறகு இரவின் ஒருபகுதி/மூன்றில் ஒருபகுதி கடந்தபின் இஷாத் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். அதிகாலையில், “கேள்வி கேட்டவர் எங்கே? நீங்கள் கண்ட (இவ்விரு தினங்களின் தொழுகை நேரங்களின்) இடைப்பட்ட நேரமே (ஐவேளைத்) தொழுகை நேரங்களாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா (ரலி)

குறிப்பு :

(இஷாவுடைய நேரம்) இரவின் ஒருபகுதி கடந்த பின்னரா அன்றி மூன்று பகுதிகள் கடந்த பின்னரா? என்பதில், ஹரமீ பின் உமாரா (ரஹ்) என்பவருக்கு ஐயம் இருந்திருக்கிறது.

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 969

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَزْرَقِ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّ رَجُلًا سَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ فَقَالَ لَهُ ‏ ‏صَلِّ مَعَنَا هَذَيْنِ ‏ ‏يَعْنِي الْيَوْمَيْنِ فَلَمَّا ‏ ‏زَالَتْ ‏ ‏الشَّمْسُ أَمَرَ ‏ ‏بِلَالًا ‏ ‏فَأَذَّنَ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الظُّهْرَ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ نَقِيَّةٌ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْمَغْرِبَ حِينَ غَابَتْ الشَّمْسُ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْفَجْرَ حِينَ طَلَعَ الْفَجْرُ فَلَمَّا أَنْ كَانَ الْيَوْمُ الثَّانِي أَمَرَهُ ‏ ‏فَأَبْرَدَ ‏ ‏بِالظُّهْرِ ‏ ‏فَأَبْرَدَ ‏ ‏بِهَا فَأَنْعَمَ أَنْ ‏ ‏يُبْرِدَ ‏ ‏بِهَا وَصَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ أَخَّرَهَا فَوْقَ الَّذِي كَانَ وَصَلَّى الْمَغْرِبَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ وَصَلَّى الْعِشَاءَ بَعْدَمَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ وَصَلَّى الْفَجْرَ ‏ ‏فَأَسْفَرَ ‏ ‏بِهَا ثُمَّ قَالَ أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ فَقَالَ الرَّجُلُ أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ وَقْتُ صَلَاتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் தொழுகையின் நேரம் குறித்துக் கேட்டார். அவரிடம் நபி (ஸல்), “நம்முடன் இரு நாட்கள் தொழுங்கள்!” என்று கூறினார்கள். (முதல்நாள்) சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது, பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு(ம் பிறகு இகாமத்தும்) சொல்லுமாறு உத்தரவிட, பிலால் (ரலி) லுஹ்ருத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (அஸ்ருத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அஸ்ருத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். அப்போது சூரியன் ஒளிமிக்கதாகவும் தெளிவாகவும் (வானில்) தெரிந்தது. பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (மஃக்ரிப் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) சூரியன் மறையும்போது மஃக்ரிப் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (இஷாத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) செம்மேகம் மறையும்போது இஷாத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (ஃபஜ்ருத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் வைகறைப் பொழுது புலரும்போது ஃபஜ்ருத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.

இரண்டாம் நாள் நபி (ஸல்), பிலால் (ரலி) அவர்களிடம் வெப்பம் தணிந்தபின் லுஹ்ருத் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) வெப்பம் தணிந்தபின் (பாங்கும்), நன்கு வெப்பம் குறைந்திருந்த வேளையில் இகாமத்தும் சொன்னார்கள். பின்னர் சூரியன் உச்சி(சாய்ந்து) முடிவுக்கு வரவே அஸ்ருத் தொழுதார்கள். முந்திய நாளைவிடச் சிறிது நேரம் தாமதப்படுத்தினார்கள். செம்மேகம் மறைவதற்குமுன் மஃக்ரிபுத் தொழுதார்கள். இரவின் மூன்றில் ஒரு பகுதி சென்றபின் இஷாத் தொழுதார்கள். (சூரியன் எழுமுன் தோன்றும்) நல்ல வெளிச்சம் வந்தபின் ஃபஜ்ருத் தொழுதார்கள். பிறகு, “தொழுகைகளின் நேரம் குறித்து என்னிடம் வினவியவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் (இதோ இருக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்), “நீங்கள் (இரு தினங்களாகக்) கண்ட நேரங்களுக்கு இடைப்பட்ட நேரம்தான் உங்கள் (ஐவேளைத்) தொழுகை நேரமாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 968

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يَقُولُا ‏

لَا يُسْتَطَاعُ الْعِلْمُ بِرَاحَةِ الْجِسْمِ

என் தந்தை யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்), “உடல் சுகம் பெரிதானால் கல்வியை அடைய முடியாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்)

குறிப்பு :

இத்தகவல் தலைப்புக்கு அப்பாற்பட்டு உள்ளது. இது ஹதீஸும் அல்ல.
அறிவிப்பாளர் நபித்தோழரும் அல்லர். இருப்பினும், முஸ்லிம் மூலத்தில் இவ்வாறே உள்ளதால் நமது பதிப்பிலும் மாற்றமின்றிப் பதிந்துள்ளோம்.

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 967

و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ يُوسُفَ الْأَزْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رَزِينٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ يَعْنِي ابْنَ طَهْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَجَّاجِ وَهُوَ ابْنُ حَجَّاجٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

سُئِلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ وَقْتِ الصَّلَوَاتِ فَقَالَ ‏ ‏وَقْتُ صَلَاةِ الْفَجْرِ مَا لَمْ يَطْلُعْ قَرْنُ الشَّمْسِ الْأَوَّلُ وَوَقْتُ صَلَاةِ الظُّهْرِ إِذَا زَالَتْ الشَّمْسُ عَنْ بَطْنِ السَّمَاءِ مَا لَمْ يَحْضُرْ الْعَصْرُ وَوَقْتُ صَلَاةِ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ وَيَسْقُطْ قَرْنُهَا الْأَوَّلُ وَوَقْتُ صَلَاةِ الْمَغْرِبِ إِذَا غَابَتْ الشَّمْسُ مَا لَمْ يَسْقُطْ الشَّفَقُ وَوَقْتُ صَلَاةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகை நேரங்கள் குறித்து வினவப்பட்டபோது, “ஃபஜ்ருத் தொழுகையின் நேரம், சூரியனின் மேற்புற விளிம்பு வெளிப்படுவதற்கு முன்புவரை உள்ளது. லுஹ்ருத் தொழுகையின் நேரம், சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தது முதல் அஸ்ரு நேரம் வருவதற்கு முன்புவரை உள்ளது. அஸ்ருத் தொழுகையின் நேரம், சூரியன் பொன்னிறமாகி அதன் விளிம்பு மறைவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிபுத் தொழுகையின் நேரம், சூரியன் மறைந்தது முதல் செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை உள்ளது” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்
பின் அம்ரு (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 966

‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏وَقْتُ الظُّهْرِ إِذَا ‏ ‏زَالَتْ ‏ ‏الشَّمْسُ وَكَانَ ظِلُّ الرَّجُلِ كَطُولِهِ مَا لَمْ يَحْضُرْ الْعَصْرُ وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ وَوَقْتُ صَلَاةِ الْمَغْرِبِ مَا لَمْ يَغِبْ الشَّفَقُ وَوَقْتُ صَلَاةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ الْأَوْسَطِ وَوَقْتُ صَلَاةِ الصُّبْحِ مِنْ طُلُوعِ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعْ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ الشَّمْسُ فَأَمْسِكْ عَنْ الصَّلَاةِ فَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ

“லுஹ்ருத் தொழுகையின் நேரம், சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு(ச் சமம்) ஆகி, அஸ்ரு நேரத்திற்கு முன்புவரை உள்ளது. அஸ்ருத் தொழுகையின் நேரம், சூரியன் மஞ்சள்நிறமாவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம், செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை உள்ளது. ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது. சூரியன் உதித்துவிட்டால் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில்,ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் அது உதயமாகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்
பின் அம்ரு (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 965

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَيُّوبَ ‏ ‏وَاسْمَهْ ‏ ‏يَحْيَى بْنُ مَالِكٍ الْأَزْدِيُّ وَيُقَالُ الْمَرَاغِيُّ ‏ ‏وَالْمَرَاغُ ‏ ‏حَيٌّ مِنْ ‏ ‏الْأَزْدِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏وَقْتُ الظُّهْرِ مَا لَمْ يَحْضُرْ الْعَصْرُ وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ وَوَقْتُ الْمَغْرِبِ مَا لَمْ يَسْقُطْ ‏ ‏ثَوْرُ ‏ ‏الشَّفَقِ وَوَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ وَوَقْتُ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعْ الشَّمْسُ ‏

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَفِي حَدِيثِهِمَا ‏ ‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏رَفَعَهُ مَرَّةً وَلَمْ يَرْفَعْهُ مَرَّتَيْنِ

“லுஹ்ருத் தொழுகையின் நேரம் அஸ்ரு நேரம் வரும்வரை உள்ளது. அஸ்ருத் தொழுகையின் நேரம் சூரியன் மஞ்சள் நிறமாவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிபுத் தொழுகையின் நேரம் செம்மேகம் பரவி மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை உள்ளது ஃபஜ்ருத் தொழுகையின் நேரம் சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்
பின் அம்ரு (ரலி)

குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்), யஹ்யா பின் அபீபக்ரு (ரஹ்) ஆகிய இருவர் வழி அறிவிப்புகளிலும் இந்த ஹதீஸ், “நபி (ஸல்) கூறினார்கள்” என்று ஒருமுறையும் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு கூறியதாக இருமுறையும் அறிவிக்கப் படுவதாக ஷுஅபா (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 964

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ وَهُوَ ابْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏

أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا صَلَّيْتُمْ الْفَجْرَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى أَنْ يَطْلُعَ قَرْنُ الشَّمْسِ الْأَوَّلُ ثُمَّ إِذَا صَلَّيْتُمْ الظُّهْرَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى أَنْ يَحْضُرَ الْعَصْرُ فَإِذَا صَلَّيْتُمْ الْعَصْرَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى أَنْ تَصْفَرَّ الشَّمْسُ فَإِذَا صَلَّيْتُمْ الْمَغْرِبَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى أَنْ يَسْقُطَ الشَّفَقُ فَإِذَا صَلَّيْتُمْ الْعِشَاءَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى نِصْفِ اللَّيْلِ

“நீங்கள் ஃபஜ்ருத் தொழுதால் அதன் நேரம் சூரியனின் விளிம்பு வெளிப்படும்வரையாகும். பின்னர் நீங்கள் லுஹ்ருத் தொழுதால் அதன் நேரம் (நண் பகலிலிருந்து) அஸ்ரு(த் தொழுகையின்) நேரம் வரும்வரையாகும். பின்னர் நீங்கள் அஸ்ருத் தொழுதால், அதன் நேரம் சூரியன் மஞ்சள் நிறமாகும் வரையாகும். பின்னர் நீங்கள் மஃக்ரிபுத் தொழுதால், அதன் நேரம் (சூரியன் விழுந்து) செம்மேகம் மறையும் வரையாகும். பின்னர் நீங்கள் இஷாத் தொழுதால் அதன் நேரம் (செம்மேகம் மறைந்ததிலிருந்து) நள்ளிரவு வரையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்
பின் அம்ரு (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 963

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ وَاقِعَةٌ فِي حُجْرَتِي

சூரிய ஒளி எனது அறைக்குள் இருந்து கொண்டிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஸ்ரைத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 962

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرَتْهُ ‏

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرَتْهُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا لَمْ يَظْهَرْ ‏ ‏الْفَيْءُ ‏ ‏فِي حُجْرَتِهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சூரிய ஒளி எனது அறைக்குள் இருந்து கொண்டிருக்க அஸ்ருத் தொழுகையைத் தொழும்போது எனது அறையில் நிழல் படிந்திருக்காது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)