و حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ :
أَنَّهُ دَخَلَ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِي دَارِهِ بِالْبَصْرَةِ حِينَ انْصَرَفَ مِنْ الظُّهْرِ وَدَارُهُ بِجَنْبِ الْمَسْجِدِ فَلَمَّا دَخَلْنَا عَلَيْهِ قَالَ أَصَلَّيْتُمْ الْعَصْرَ فَقُلْنَا لَهُ إِنَّمَا انْصَرَفْنَا السَّاعَةَ مِنْ الظُّهْرِ قَالَ فَصَلُّوا الْعَصْرَ فَقُمْنَا فَصَلَّيْنَا فَلَمَّا انْصَرَفْنَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِ يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَيْ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَهَا أَرْبَعًا لَا يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلَّا قَلِيلًا
நான் லுஹ்ருத் தொழுதுவிட்டு, பஸ்ரா நகர்ப் பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் இருந்த அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் இல்லத்துக்குச் (சிலரோடு) சென்றேன். நாங்கள் அவர்களிடம் சென்றபோது, “நீங்கள் அஸ்ருத் தொழுதுவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “(இல்லை) நாங்கள் இப்போதுதான் லுஹ்ருத் தொழுதுவிட்டு வருகிnறோம்” என்று சொன்னோம். அனஸ் (ரலி), “அவ்வாறாயின் நீங்கள் அஸ்ருத் தொழுங்கள்” என்றார்கள். உடனே நாங்கள் எழுந்து (அஸ்ரைத்) தொழுதோம். நாங்கள் தொழுது முடித்ததும் அனஸ் (ரலி), “நயவஞ்சகன் சூரியனை எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பான். சூரியன் (சரியாக) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே (உதயமாகி/மறைந்து) வரும்போது அவன் (அவசர அவசரமாகக் கோழி கொத்துவதைப் போன்று) நான்கு கொத்து கொத்துவான். அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவுகூர்வான். அந்தத் தொழுகை நயவஞ்சகனின் தொழுகையாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அலா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)