அத்தியாயம்: 5, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1008

و حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏

أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏ ‏أَعْتَمَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْلَةً مِنْ اللَّيَالِي ‏ ‏بِصَلَاةِ الْعِشَاءِ وَهِيَ الَّتِي ‏ ‏تُدْعَى الْعَتَمَةَ فَلَمْ يَخْرُجْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى قَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ فَخَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لِأَهْلِ الْمَسْجِدِ حِينَ خَرَجَ عَلَيْهِمْ ‏ ‏مَا يَنْتَظِرُهَا أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ غَيْرُكُمْ وَذَلِكَ قَبْلَ أَنْ يَفْشُوَ الْإِسْلَامُ فِي النَّاسِ ‏ ‏زَادَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَذُكِرَ لِي ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَمَا كَانَ لَكُمْ أَنْ ‏ ‏تَنْزُرُوا ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الصَّلَاةِ وَذَاكَ حِينَ صَاحَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏

و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ وَلَمْ يَذْكُرْ قَوْلَ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏وَذُكِرَ لِي ‏ ‏وَمَا بَعْدَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அல்-அதமா’ என வழங்கிவந்த இஷாத் தொழுகையை ஓர் இரவில் நன்கு இருள் சூழும்வரை தாமதப்படுத்தினார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் “பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று (உரத்துக்) கூறும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது இல்லத்திலிருந்து) வெளிவரவில்லை. (பின்னர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து, அப்போது பள்ளிவாசலில் இருந்தவர்களை நோக்கி, “இந்த பூமியில் வசிப்பவர்களில் உங்களைத் தவிர வேறு யாரும் (இப்போது) இத்தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கவில்லை”என்று கூறினார்கள். இது, மக்களிடையே இஸ்லாம் (அதிகமாகப்) பரவுவதற்கு முன் நடைபெற்றதாகும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

ஹர்மலா (ரஹ்) வழி அறிவிப்பில், உமர் பின் அல்கத்தாப் (ரலி) உரத்த குரலில் அழைத்தபோது “தொழுவிக்க வருமாறு அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்துகின்ற உரிமை உங்களுக்கு இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்று எனக்கு அறிவிக்கப்பட்டது என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அல்லைஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், இப்னு ஷிஹாப் (ரஹ்) குறிப்பிட்டுள்ள கூடுதல் தகவல் இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment