அத்தியாயம்: 5, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1014

و حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ الْأَشْعَرِيُّ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏بُرَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏

كُنْتُ أَنَا وَأَصْحَابِي الَّذِينَ قَدِمُوا مَعِي فِي السَّفِينَةِ نُزُولًا فِي بَقِيعِ ‏ ‏بُطْحَانَ ‏ ‏وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏فَكَانَ يَتَنَاوَبُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَ صَلَاةِ الْعِشَاءِ كُلَّ لَيْلَةٍ نَفَرٌ مِنْهُمْ قَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏فَوَافَقْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَا وَأَصْحَابِي وَلَهُ بَعْضُ الشُّغْلِ فِي أَمْرِهِ حَتَّى ‏ ‏أَعْتَمَ ‏ ‏بِالصَّلَاةِ حَتَّى ‏ ‏ابْهَارَّ ‏ ‏اللَّيْلُ ثُمَّ خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَصَلَّى بِهِمْ فَلَمَّا قَضَى صَلَاتَهُ قَالَ لِمَنْ حَضَرَهُ ‏ ‏عَلَى رِسْلِكُمْ ‏ ‏أُعْلِمُكُمْ وَأَبْشِرُوا أَنَّ مِنْ نِعْمَةِ اللَّهِ عَلَيْكُمْ أَنَّهُ لَيْسَ مِنْ النَّاسِ أَحَدٌ ‏ ‏يُصَلِّي هَذِهِ السَّاعَةَ غَيْرُكُمْ ‏ ‏أَوْ قَالَ مَا صَلَّى هَذِهِ السَّاعَةَ أَحَدٌ غَيْرُكُمْ لَا نَدْرِي أَيَّ الْكَلِمَتَيْنِ قَالَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏فَرَجَعْنَا فَرِحِينَ بِمَا سَمِعْنَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நானும் என்னுடன் (யமன் நாட்டிலிருந்து) கப்பலில் வந்த என் நண்பர்களும் (மதீனா அருகிலுள்ள) ‘புத்ஹான்’ எனும் பரந்த பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவில் இருந்தார்கள். எங்களில் சிலர் முறைவைத்து ஒவ்வோர் இரவும் இஷாத் தொழுகை நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். (எனது முறை வந்தபோது) நானும் என் நண்பர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற வேளையில் அவர்கள் ஓர் அலுவலில் ஈடுபட்டிருந்ததால் பாதி இரவுவரை இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அதன்பிறகு புறப்பட்டுவந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் அங்கிருந்த மக்களை நோக்கி, “அப்படியே இருங்கள். உங்களுக்கு ஒன்றை நான் அறிவிக்கப்போகிறேன். நற்செய்தி பெறுங்கள். இந்த நேரத்தில் மக்களில் உங்களைத் தவிர வேறு யாரும் தொழவில்லை/தொழுதுகொண்டிருக்கவில்லை. இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற இந்த நற்செய்தியைக் கேட்டுப் பெருமகிழ்ச்சியடைந்தவர்களாக நாங்கள் திரும்பினோம்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி)

குறிப்பு :

“இந்த நேரத்தில் மக்களில் உங்களைத் தவிர வேறு யாரும் தொழவில்லை/தொழுதுகொண்டிருக்கவில்லை” ஆகிய இருகால வேறுபாட்டுச் சொல்லில் எந்த ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று சரியாக நினைவில்லை என்று நபித்தோழர் அபூமூஸா அல்அஷ் அரீ (ரலி) கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Hadith:

Leave a Comment