அத்தியாயம்: 5, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1031

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ ‏ ‏قَالَ ‏ ‏أَخَّرَ ‏ ‏ابْنُ زِيَادٍ ‏ ‏الصَّلَاةَ فَجَاءَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الصَّامِتِ ‏ ‏فَأَلْقَيْتُ لَهُ كُرْسِيًّا فَجَلَسَ عَلَيْهِ فَذَكَرْتُ لَهُ صَنِيعَ ‏ ‏ابْنِ زِيَادٍ ‏ ‏فَعَضَّ عَلَى شَفَتِهِ وَضَرَبَ فَخِذِي ‏ ‏وَقَالَ ‏

إِنِّي سَأَلْتُ ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ وَقَالَ إِنِّي سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ وَقَالَ ‏ ‏صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكَتْكَ الصَّلَاةُ مَعَهُمْ فَصَلِّ وَلَا تَقُلْ إِنِّي قَدْ صَلَّيْتُ فَلَا أُصَلِّي

(பஸ்ராவில் ஆட்சியராக இருந்த) இப்னு ஸியாத் தொழுகையைத் தாமதப்படுத்திய காலகட்டத்தில் என்னிடம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) வந்தார்கள். நான் அவர்களுக்காக ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டேன். அதில் அவர்கள் அமர்ந்தார்கள். நான் அவர்களிடம் இப்னு ஸியாதின் செயல் குறித்துச் சொன்னேன். அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் தமது உதட்டைக் கடித்துக்கொண்டே என் தொடையில் தட்டிவிட்டு, “நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது உமது தொடையில் நான் தட்டியதைப் போன்றே எனது தொடையில் அபூதர் (ரலி) அவர்கள் தட்டிவிட்டு, ‘ நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, நான் உமது தொடையில் தட்டியதைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் தொடையில் தட்டிவிட்டு, -தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள். பின்னர் (அதே தொழுகையை) ஜமாஅத்துடன் தொழுகின்ற வாய்ப்புக் கிடைத்தால் அப்போதும் தொழுதுகொள்; நான் (ஏற்கெனவே) தொழுதுவிட்டேன். இனி தொழமாட்டேன் என்று சொல்லாதே! – என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்’ என அபூதர் (ரலி) தெரிவித்தார்கள்” என்பதாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) கூறினார்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஸாமித் (ரஹ்) வழியாக அபுல் ஆலியா அல்பர்ராஉ (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment