அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1033

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ وَهُوَ ابْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏مَطَرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏:‏

نُصَلِّي يَوْمَ الْجُمُعَةِ خَلْفَ أُمَرَاءَ فَيُؤَخِّرُونَ الصَّلَاةَ قَالَ فَضَرَبَ فَخِذِي ضَرْبَةً أَوْجَعَتْنِي ‏ ‏وَقَالَ سَأَلْتُ ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏عَنْ ذَلِكَ فَضَرَبَ فَخِذِي وَقَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَقَالَ ‏ ‏صَلُّوا الصَّلَاةَ لِوَقْتِهَا وَاجْعَلُوا صَلَاتَكُمْ مَعَهُمْ نَافِلَةً ‏


قَالَ ‏ ‏و قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏ذُكِرَ لِي ‏ ‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضَرَبَ فَخِذَ ‏ ‏أَبِي ذَرٍّ

நான் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்களிடம், “நாங்கள் வெள்ளிக்கிழமைகளில் சில ஆட்சித் தலைவர்களைப் பின்பற்றித் தொழுகின்றோம்; அவர்கள் தொழுகையைத் தாமதப்படுத்தித் தொழுகின்றனர்” என்று கூறினேன். அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) எனது தொடையில் வலிக்கும் அளவிற்கு ஓர் அடி அடித்தார்கள். பிறகு, “நான் இது தொடர்பாக அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் என் தொடையில் அடித்துவிட்டு, ‘ நான் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) – தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள்! பின்னர் மக்களுடன் நீங்கள் தொழும் தொழுகையைக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக ஆக்கிக்கொள்ளுங்கள் – என்று சொன்னார்கள்’ என அபூதர் (ரலி) கூறினார்கள்” என்பதாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) கூறினார்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) வழியாக, அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) வழியாக, அபுல் ஆலியா அல்பர்ராஉ (ரஹ்)


குறிப்பு :

நபித்தோழர் அபூதர் (ரலி) அவர்களின் சகோதரர் மகனான அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அபூதர் (ரலி) அவர்களின் தொடையில் அடித்தார்கள் என்று எனக்கு அறிவிக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் சொற்கள் மட்டுமின்றி அவர்களின் சிற்சில செயல்முறைகளும் அறிவிப்பாளர்களால் வழிவழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன.

அத்தியாயம்: 5, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1032

و حَدَّثَنَا ‏ ‏عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَعَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ :‏

قَالَ ‏ ‏كَيْفَ أَنْتُمْ أَوْ قَالَ ‏ ‏كَيْفَ أَنْتَ إِذَا بَقِيتَ فِي قَوْمٍ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا فَصَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا ثُمَّ إِنْ أُقِيمَتْ الصَّلَاةُ فَصَلِّ مَعَهُمْ فَإِنَّهَا زِيَادَةُ خَيْرٍ

அபூதர் (ரலி) (என்னிடம்), “தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தும் மக்களிடையே தங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் நீ என்ன செய்வாய்/நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டுவிட்டுப் பிறகு, “அப்போது தொழுகையை உரிய நேரத்தில் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். பிறகு (கூட்டுத்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அப்போதும் நீங்கள் மக்களுடன் (சேர்ந்து) தொழுது கொள்ளுங்கள். அது கூடுதல் நன்மையாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் அபூதர் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1031

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ ‏ ‏قَالَ ‏ ‏أَخَّرَ ‏ ‏ابْنُ زِيَادٍ ‏ ‏الصَّلَاةَ فَجَاءَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الصَّامِتِ ‏ ‏فَأَلْقَيْتُ لَهُ كُرْسِيًّا فَجَلَسَ عَلَيْهِ فَذَكَرْتُ لَهُ صَنِيعَ ‏ ‏ابْنِ زِيَادٍ ‏ ‏فَعَضَّ عَلَى شَفَتِهِ وَضَرَبَ فَخِذِي ‏ ‏وَقَالَ :‏‏

إِنِّي سَأَلْتُ ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ وَقَالَ إِنِّي سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ وَقَالَ ‏ ‏صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكَتْكَ الصَّلَاةُ مَعَهُمْ فَصَلِّ وَلَا تَقُلْ إِنِّي قَدْ صَلَّيْتُ فَلَا أُصَلِّي

(பஸ்ராவில் ஆட்சியராக இருந்த) இப்னு ஸியாத் தொழுகையைத் தாமதப்படுத்திய காலகட்டத்தில் என்னிடம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) வந்தார்கள். நான் அவர்களுக்காக ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டேன். அதில் அவர்கள் அமர்ந்தார்கள். நான் அவர்களிடம் இப்னு ஸியாதின் செயல் குறித்துச் சொன்னேன். அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) தமது உதட்டைக் கடித்துக்கொண்டே என் தொடையில் தட்டிவிட்டு, “நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது உமது தொடையில் நான் தட்டியதைப் போன்றே எனது தொடையில் அபூதர் (ரலி) தட்டிவிட்டு, ‘ நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, நான் உமது தொடையில் தட்டியதைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் தொடையில் தட்டிவிட்டு, -’தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள். பின்னர் (அதே தொழுகையை) ஜமாஅத்துடன் தொழுகின்ற வாய்ப்புக் கிடைத்தால் அப்போதும் தொழுதுகொள்; நான் (ஏற்கெனவே) தொழுதுவிட்டேன். இனி தொழமாட்டேன் என்று சொல்லாதே!’ – என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்’ என அபூதர் (ரலி) தெரிவித்தார்கள்” என்பதாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) கூறினார்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) வழியாக, அப்துல்லாஹ் பின் ஸாமித் (ரஹ்), வழியாக அபுல் ஆலியா அல்பர்ராஉ (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1030

و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏بُدَيْلٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا الْعَالِيَةِ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ :‏‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَضَرَبَ فَخِذِي ‏ ‏كَيْفَ أَنْتَ إِذَا بَقِيتَ فِي قَوْمٍ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا قَالَ قَالَ مَا تَأْمُرُ قَالَ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا ثُمَّ اذْهَبْ لِحَاجَتِكَ فَإِنْ أُقِيمَتْ الصَّلَاةُ وَأَنْتَ فِي الْمَسْجِدِ فَصَلِّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் தொடையில் தட்டி, “தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தும் மக்களிடையே நீ் தங்க நேரிட்டால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்கள். “நான் (அச்சூழலில்) என்ன செய்ய வேண்டும் என நீங்கள் உத்தரவிடுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகையை அதற்கு உரிய நேரத்தில் தொழுது கொள். பிறகு உனது (பிற) தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் போகலாம். நீ பள்ளிவாசலில் இருக்கும்போதே தொழுகைக்கு(த் தாமதமாக) இகாமத் சொல்லப்பட்டுவிட்டால், அப்போதும் நீ (ஜமாஅத்தோடு இணைந்து) தொழுது கொள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1029

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عِمْرَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏:‏

إِنَّ خَلِيلِي أَوْصَانِي ‏ ‏أَنْ أَسْمَعَ وَأُطِيعَ وَإِنْ كَانَ عَبْدًا ‏ ‏مُجَدَّعَ ‏ ‏الْأَطْرَافِ وَأَنْ أُصَلِّيَ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَ الْقَوْمَ وَقَدْ صَلَّوْا كُنْتَ قَدْ ‏ ‏أَحْرَزْتَ ‏ ‏صَلَاتَكَ وَإِلَّا كَانَتْ لَكَ نَافِلَةً

என் உற்ற தோழர் (நபி-ஸல்) என்னிடம் “(உன் தலைவருடைய சொல்லைச்) செவியேற்று அதற்குக் கட்டுப்பட வேண்டும்; அவர் (கை, கால்) உறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும்” என்றும் “தொழுகையை உரிய நேரத்தில் தொழ வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்கள். பின்னர் “தொழுது முடித்துவிட்ட நிலையில் மக்களை நீ் அடைந்தால், (முன்பே தொழுதுவிட்ட) உனது தொழுகையைக் காப்பாற்றிக் கொண்டாய். அவ்வாறின்றி (அவர்களுடன் சேர்ந்து நீ மறுபடியும் தொழுதால்) அது உனக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகை ஆகிவிடும்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1028

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ لِي ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏إِنَّهُ سَيَكُونُ بَعْدِي أُمَرَاءُ ‏ ‏يُمِيتُونَ ‏ ‏الصَّلَاةَ فَصَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ صَلَّيْتَ لِوَقْتِهَا كَانَتْ لَكَ نَافِلَةً وَإِلَّا كُنْتَ قَدْ ‏ ‏أَحْرَزْتَ ‏ ‏صَلَاتَكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “அபூதர், எனக்குப் பின்னால் சில தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் தொழுகையை(உரிய நேரத்தில் தொழாமல் அதை)ச் சாகடிப்பார்கள். அப்போது நீ தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுது கொள்! அவ்வாறு உரிய நேரத்தில் தொழுதபின் (அவர்களுடனும் சேர்ந்து) நீ் தொழுதால் அது உனக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகை ஆகிவிடும். (அவ்வாறு) இல்லையேல், நீ உனது தொழுகையைப் பேணிவிட்டாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1027

حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ لِي ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا ‏ ‏أَوْ ‏ ‏يُمِيتُونَ ‏ ‏الصَّلَاةَ عَنْ وَقْتِهَا قَالَ ‏ ‏قُلْتُ فَمَا تَأْمُرُنِي قَالَ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ ‏


وَلَمْ يَذْكُرْ ‏ ‏خَلَفٌ ‏ ‏عَنْ وَقْتِهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “தொழுகையை அதன் உரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்கள். “நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகின்றீர்கள்?” என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள். பிறகு அவர்களுடன் (அதே தொழுகையை இணைந்து) நீ தொழ நேர்ந்தால் தொழுது கொள். அது உனக்குக் கூடுதல்(நஃபில்) தொழுகையாக அமைந்துவிடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)


குறிப்பு :

கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “… அதன் உரிய நேரத்தைவிட்டு …” என்பது இடம்பெறவில்லை.