அத்தியாயம்: 5, பாடம்: 43, ஹதீஸ் எண்: 1035

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏تَفْضُلُ صَلَاةٌ فِي الْجَمِيعِ عَلَى صَلَاةِ الرَّجُلِ وَحْدَهُ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً قَالَ وَتَجْتَمِعُ مَلَائِكَةُ اللَّيْلِ وَمَلَائِكَةُ النَّهَارِ فِي صَلَاةِ الْفَجْرِ ‏

قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏اقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏‏وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا

و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْيَمَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعَيْبٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَعِيدٌ ‏ ‏وَأَبُو سَلَمَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏عَبْدِ الْأَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏إِلَّا أَنَّهُ قَالَ بِخَمْسٍ وَعِشْرِينَ جُزْءًا

“ஒருவர் தனியாகத் தொழும் தொழுகையைவிடக் கூட்டாகத் தொழும் தொழுகை, இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். அதிகாலை(ஃபஜ்ரு)த் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் ஒன்றுசேர்கிறார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி), “(நபியே!) அதிகாலையில் ஓது(தொழு)வதைக் கடைப்பிடிப்பீராக! (ஏனெனில்,) அதிகாலையில் ஓது(தொழு)வது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப் படக்கூடியதாகும் எனும் (17:78ஆவது) இறைவசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

ஷுஐப் (ரஹ்) வழி அறிவிப்பில், இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி), நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக இடம்பெற்றுள்ள போதும், “கூட்டுத் தொழுகை, இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்” என்பது இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment