அத்தியாயம்: 5, பாடம்: 43, ஹதீஸ் எண்: 1037

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ ‏ ‏أَنَّهُ بَيْنَا هُوَ جَالِسٌ مَعَ ‏ ‏نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏ ‏إِذْ مَرَّ بِهِمْ ‏ ‏أَبُو عَبْدِ اللَّهِ ‏ ‏خَتَنُ ‏ ‏زَيْدِ بْنِ زَبَّانٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْجُهَنِيِّينَ ‏ ‏فَدَعَاهُ ‏ ‏نَافِعٌ ‏ ‏فَقَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةٌ مَعَ الْإِمَامِ أَفْضَلُ مِنْ خَمْسٍ وَعِشْرِينَ صَلَاةً يُصَلِّيهَا وَحْدَهُ

“இமாமுடன் சேர்ந்து தொழுவதானது, தனியாகத் தொழும் இருபத்தைந்து தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“நான் (ஒரு நாள்) நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஸைத் பின் ஸப்பான் (ரஹ்) அவர்களுடைய மருமகன் அபூஅப்தில்லாஹ் (ரஹ்) அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை நாஃபிஉ (ரஹ்) அழைத்து, – இமாமுடன் சேர்ந்து தொழுவதானது, தனியாகத் தொழும் இருபத்தைந்து தொழுகைகளைவிடச் சிறந்தததாகும் – என்ற ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து தாம் செவியுற்றதாகக் கூறினார்கள்” என்று உமர் பின் அதாஉ பின் அபில்குவார் (ரஹ்) அறிவிக்கின்றார்.

Share this Hadith:

Leave a Comment