அத்தியாயம்: 5, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1060

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ السَّخْتِيَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ الْمَلَائِكَةَ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مَجْلِسِهِ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ ‏ ‏يُحْدِثْ ‏ ‏وَأَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا كَانَتْ الصَّلَاةُ ‏ ‏تَحْبِسُهُ

“உங்களில் ஒருவர் தொழுத இடத்திலேயே (உளூவுடன்) அமர்ந்திருந்தால் அவருக்குக் காற்றுப் பிரியும்வரை வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். ‘இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!’ என்று அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தொழுகையை எதிர்பார்த்துக் கட்டுப்பாட்டுடன் காத்திருக்கும் உங்களில் ஒருவர், தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment