அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1082

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏أَنَّهُمَا سَمِعَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ حِينَ يَفْرُغُ مِنْ صَلَاةِ الْفَجْرِ مِنْ الْقِرَاءَةِ وَيُكَبِّرُ وَيَرْفَعُ رَأْسَهُ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ اللَّهُمَّ أَنْجِ ‏ ‏الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ ‏ ‏وَسَلَمَةَ بْنَ هِشَامٍ ‏ ‏وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ ‏ ‏وَالْمُسْتَضْعَفِينَ مِنْ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ ‏ ‏وَطْأَتَكَ ‏ ‏عَلَى ‏ ‏مُضَرَ ‏ ‏وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي ‏ ‏يُوسُفَ ‏ ‏اللَّهُمَّ الْعَنْ ‏ ‏لِحْيَانَ ‏ ‏وَرِعْلًا ‏ ‏وَذَكْوَانَ ‏ ‏وَعُصَيَّةَ ‏ ‏عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ ثُمَّ بَلَغَنَا أَنَّهُ تَرَكَ ذَلِكَ لَمَّا أُنْزِلَ ‏‏لَيْسَ لَكَ مِنْ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ ‏

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏إِلَى قَوْلِهِ وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي ‏ ‏يُوسُفَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஃபஜ்ருத் தொழும்போது (முதல் ரக்அத்தின் நிலையில் இறைவசனங்களை) ஓதியபின் தக்பீர் சொல்(லி ருகூஉ செய்)வார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ ‘ரப்பனா வலக்கல் ஹம்து’ என்று கூறுவார்கள். பிறகு நின்றநிலையில்,
“இறைவா! வலீத் பின் அல்வலீத், ஸலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரையும் (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக!
இறைவா, முளர் குலத்தார்மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூஸுஃபின் (காலத்துப் பஞ்ச) ஆண்டுகளைகளைப்போல் அவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக!
இறைவா! லிஹ்யான், ரிஃல், தக்வான், உஸய்யா ஆகிய குலத்தாரை நீ உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! உஸய்யா குலத்தார் (பெயருக்கேற்ப) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். (ஒருநாள்),

“(நபியே! எவரையும் சபிக்கும்) இந்த விஷயத்தில் உமக்கு எவ்வித உரிமையும் இல்லை. அல்லாஹ் அவர்களை (இஸ்லாத்தில் புகுத்தி, அவர்களது பாவங்களை) மன்னித்துவிடலாம். அல்லாமல், அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவன் அவர்களை தண்டிக்கலாம்” எனும் (3:128ஆவது) இறைவசனம் அருளப்பெற்றவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டார்கள் என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

இபுனு உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில், “இறைவா! (உன் தூதர்) யூஸுஃபின் (காலத்துப் பஞ்ச) ஆண்டுகளைகளைப்போல் அவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக!” என்பதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.

பிஃரு மஊனாப் படுகொலை:

“எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பதற்கும் இஸ்லாத்தைக் கற்றுத் தருவதற்கும் ஒரு குழுவினரைத் தங்களோடு அனுப்பி வைக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு பனூ ஸுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய முக்குலத்தவர் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தனர். இது நிகழ்ந்தது ஹிஜ்ரீ நான்காம் ஆண்டில். பனூ ஸுலைம் கோத்திரத்தாரின் கோரிக்கையை ஏற்று, இறைமறையில் தேர்ச்சி மிக்க எழுபது நபித் தோழர்களை அவர்களோடு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். மதீனாவிலிருந்து நபித்தோழர்களோடு புறப்பட்ட பனூ ஸுலைமியர், ‘பிஃர் மஊனா’ எனுமிடத்தில் வாழ்ந்த தம் கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டு நிராயுதபாணிகளான அப்பாவி நபித்தோழர்களை நயவஞ்சகமாகக் கொலை செய்து, அவர்களது உடமைகளைக் கொள்ளையடித்தனர்.

Share this Hadith:

Leave a Comment