و حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدٌ وَهُوَ ابْنُ عَمْرٍو عَنْ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَرْمَلَةَ عَنْ الْحَارِثِ بْنِ خُفَافٍ أَنَّهُ قَالَ قَالَ خُفَافُ بْنُ إِيمَاءٍ :
رَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ وَعُصَيَّةُ عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ اللَّهُمَّ الْعَنْ بَنِي لِحْيَانَ وَالْعَنْ رِعْلًا وَذَكْوَانَ ثُمَّ وَقَعَ سَاجِدًا
قَالَ خُفَافٌ فَجُعِلَتْ لَعْنَةُ الْكَفَرَةِ مِنْ أَجْلِ ذَلِكَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ قَالَ وَأَخْبَرَنِيهِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَرْمَلَةَ عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيِّ بْنِ الْأَسْقَعِ عَنْ خُفَافِ بْنِ إِيمَاءٍ بِمِثْلِهِ إِلَّا أَنَّهُ لَمْ يَقُلْ فَجُعِلَتْ لَعْنَةُ الْكَفَرَةِ مِنْ أَجْلِ ذَلِكَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (தொழுகையில்) ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பிறகு “ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பானாக! அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் பாதுகாப்பானாக! உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர். இறைவா! பனூ லிஹ்யான் குலத்தாரை நீ உன் கருணையிலிருந்து அப்புறப் படுத்துவாயாக! ரிஃல், தக்வான் குலத்தாரையும் நீ உன் கருணையிலிருந்து அப்புறப் படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு ஸஜ்தாவிற்குச் சென்றார்கள்.
அறிவிப்பாளர் : குஃபாஃப் பின் ஈமல் ஃகிஃபாரீ (ரலி)
குறிப்பு :
“இறைமறுப்பாளர்களில் அட்டூழியம் புரிவோரைச் சபிக்கும் நடைமுறை இந்த முன்மாதிரியிலிருந்து பெறப்பட்டது” என்று நபித்தோழர் குஃபாஃப் (ரலி) கருத்துரைக்கிறார்.
ஹன்ளலா பின் அலீ பின் அல்அஸ்கஃ (ரஹ்) வழி அறிவிப்பில், நபித்தோழர் குஃபாஃப் (ரலி) அவர்களின் “இறைமறுப்பாளர்களில் அட்டூழியம் புரிவோரைச் சபிக்கும் நடைமுறை இந்த முன்மாதிரியிலிருந்து பெறப்பட்டது” எனும் கருத்து இடம்பெறவில்லை.