அத்தியாயம்: 50, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4928

حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعَ عُقْبَةَ بْنَ عَبْدِ الْغَافِرِ، يَقُولُ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يُحَدِّثُ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏ “‏ أَنَّ رَجُلاً فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَاشَهُ اللَّهُ مَالاً وَوَلَدًا فَقَالَ لِوَلَدِهِ لَتَفْعَلُنَّ مَا آمُرُكُمْ بِهِ أَوْ لأُوَلِّيَنَّ مِيرَاثِي غَيْرَكُمْ إِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي – وَأَكْثَرُ عِلْمِي أَنَّهُ قَالَ – ثُمَّ اسْحَقُونِي وَاذْرُونِي فِي الرِّيحِ فَإِنِّي لَمْ أَبْتَهِرْ عِنْدَ اللَّهِ خَيْرًا وَإِنَّ اللَّهَ يَقْدِرُ عَلَىَّ أَنْ يُعَذِّبَنِي – قَالَ – فَأَخَذَ مِنْهُمْ مِيثَاقًا فَفَعَلُوا ذَلِكَ بِهِ وَرَبِّي فَقَالَ اللَّهُ مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ فَقَالَ مَخَافَتُكَ ‏.‏ قَالَ فَمَا تَلاَفَاهُ غَيْرُهَا ‏”‏ ‏‏


وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ قَالَ لِي أَبِي حَدَّثَنَا قَتَادَةُ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، بْنُ عَبْدِ الرَّحْمَنِ ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، كِلاَهُمَا عَنْ قَتَادَةَ، ذَكَرُوا جَمِيعًا بِإِسْنَادِ شُعْبَةَ نَحْوَ حَدِيثِهِ وَفِي حَدِيثِ شَيْبَانَ وَأَبِي عَوَانَةَ ‏”‏ أَنَّ رَجُلاً مِنَ النَّاسِ رَغَسَهُ اللَّهُ مَالاً وَوَلَدًا ‏”‏ ‏.‏ وَفِي حَدِيثِ التَّيْمِيِّ ‏”‏ فَإِنَّهُ لَمْ يَبْتَئِرْ عِنْدَ اللَّهِ خَيْرًا ‏”‏ ‏.‏ قَالَ فَسَّرَهَا قَتَادَةُ لَمْ يَدَّخِرْ عِنْدَ اللَّهِ خَيْرًا ‏.‏ وَفِي حَدِيثِ شَيْبَانَ ‏”‏ فَإِنَّهُ وَاللَّهِ مَا ابْتَأَرَ عِنْدَ اللَّهِ خَيْرًا ‏”‏ ‏.‏ وَفِي حَدِيثِ أَبِي عَوَانَةَ ‏”‏ مَا امْتَأَرَ ‏”‏ ‏.‏ بِالْمِيمِ ‏‏

“உங்களுக்குமுன் வாழ்ந்த ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருந்தான். (அவருக்கு இறப்பு நெருங்கியபோது) அவர் தம் பிள்ளைகளிடம், ‘நான் சொல்வதைப் போன்று நீங்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், என் சொத்துகளைப் பிறருக்கு  வழங்கிவிடுவேன். நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, தூளாக்கி விடுங்கள். பிறகு அந்தச் சாம்பலைக் காற்றில் தூற்றுங்கள். ஏனெனில், நான் (எனது மறுமைக்காக) அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் சேமிக்கவில்லை. அல்லாஹ் என்னைத் தண்டிப்பதற்குச் சக்தி பெற்றவனே‘ என்று கூறி உறுதிமொழி வாங்கிக்கொண்டார்.

என் இறைவன் மீதாணையாக! (அவர் இறந்தவுடன்) அவ்வாறே அவர்கள் செய்தார்கள். பிறகு அல்லாஹ் (பழையபடி முழு மனிதராக அவரை எழுப்பி), ‘இவ்வாறு நீ செய்யக் காரணம் என்ன?‘ என்று கேட்டான். அம்மனிதர் ‘உன்மீதான அச்சத்தின் காரணத்தால்தான்‘ என்று கூறினார். அவரை (அந்த நேரத்தில் இறையச்சம்தான் காப்பாற்றியது) அதைத் தவிர வேறெதுவும் காப்பாற்றவில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்புகள் :

ஷைபான் (ரஹ்) மற்றும் அபூஅவானா (ரஹ்) வழி அறிவிப்புகளில், “மக்களில் ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருந்தான் …” என்று இடம்பெற்றுள்ளது.

முஅதமிர் பின் ஸுலைமான் அத்தைமீ (ரஹ்) வழி அறிவிப்பில், “ஃப இன்னஹு லம் யப்தயிர் இந்தல்லாஹி கைரன்” என்பதற்கு “அவர் அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் சேமித்திருக்கவில்லை” என்று கத்தாதா (ரஹ்) பொருள் செய்ததாக இடம்பெற்றுள்ளது.

(இதைக் குறிக்க) ஷைபான் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஃப இன்னஹு மப்தஅர இந்தல்லாஹி கைரன்” (அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் சேமித்திருக்கவில்லை) என்றும், அபூஅவானா (ரஹ்) அறிவிப்பில், ‘மம்தஅர’ (அவர் சேமித்திருக்கவில்லை) என்றும் காணப்படுகிறது.

Share this Hadith: