அத்தியாயம்: 52, பாடம்: 16, ஹதீஸ் எண்: 5007

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ – وَاللَّفْظُ لأَبِي كُرَيْبٍ – قَالاَ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ – قَالَ – فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ ‏”‏


قَالَ الأَعْمَشُ أُرَاهُ قَالَ ‏”‏ فَيَلْتَزِمُهُ ‏”‏ ‏

“இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கின்றான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகின்றான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற ஷைத்தானே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து “நான் இன்னின்னவாறு (குழப்பம்) செய்தேன்” என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், “ நீ (சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) எதையும் செய்யவில்லை” என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, “நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர்களுள் ஒருவரான அஃமஷ் (ரஹ்) கூறுகின்றார்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அபூஸுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்), “அப்போது அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டியணைத்துக்கொண்டு அவ்வாறு பாராட்டுகின்றான்” என்று கூறியதாகவே நான் நினைக்கின்றேன்.

Share this Hadith: