அத்தியாயம்: 53, பாடம்: 17, ஹதீஸ் எண்: 5092

حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا بُدَيْلٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏ ‏

‏”‏ إِذَا خَرَجَتْ رُوحُ الْمُؤْمِنِ تَلَقَّاهَا مَلَكَانِ يُصْعِدَانِهَا ‏”‏ ‏.‏ قَالَ حَمَّادٌ فَذَكَرَ مِنْ طِيبِ رِيحِهَا وَذَكَرَ الْمِسْكَ ‏.‏ قَالَ ‏”‏ وَيَقُولُ أَهْلُ السَّمَاءِ رُوحٌ طَيِّبَةٌ جَاءَتْ مِنْ قِبَلِ الأَرْضِ صَلَّى اللَّهُ عَلَيْكِ وَعَلَى جَسَدٍ كُنْتِ تَعْمُرِينَهُ ‏.‏ فَيُنْطَلَقُ بِهِ إِلَى رَبِّهِ عَزَّ وَجَلَّ ثُمَّ يَقُولُ انْطَلِقُوا بِهِ إِلَى آخِرِ الأَجَلِ ‏”‏ ‏.‏ قَالَ ‏”‏ وَإِنَّ الْكَافِرَ إِذَا خَرَجَتْ رُوحُهُ – قَالَ حَمَّادٌ وَذَكَرَ مِنْ نَتْنِهَا وَذَكَرَ لَعْنًا – وَيَقُولُ أَهْلُ السَّمَاءِ رُوحٌ خَبِيثَةٌ جَاءَتْ مِنْ قِبَلِ الأَرْضِ ‏.‏ قَالَ فَيُقَالُ انْطَلِقُوا بِهِ إِلَى آخِرِ الأَجَلِ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ فَرَدَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَيْطَةً كَانَتْ عَلَيْهِ عَلَى أَنْفِهِ هَكَذَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

“இறைநம்பிக்கையாளரின் உயிர் பிரியும்போது அதை இரு வானவர்கள் எடுத்துக்கொண்டு (வானுலகிற்கு) ஏறிச் செல்கின்றார்கள்”

(புதைல் பின் மைஸரா (ரஹ்) இதை அறிவிக்கும்போது, அந்த உயிரிலிருந்து வரும் நறுமணம் குறித்தும் அதில் கஸ்தூரி மணம் கமழும் என்பது குறித்தும் குறிப்பிட்டார்கள் என அறிவிப்பாளர் ஹம்மாம் பின் ஸைத் (ரஹ்) தெரிவிக்கின்றார்)

அப்போது வானவர்கள், “ஒரு நல்ல ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது. அல்லாஹ் உனக்குப் பேரருள் புரிவானாக. நீ குடியிருந்துவந்த உடலுக்கும் பேரருள் புரிவானாக!” என்று பிரார்த்திப்பார்கள். பிறகு அந்த உயிர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் கொண்டுசெல்லப்படுகிறது. பிறகு அல்லாஹ், “இதை இறுதித் தவணைவரை (மறுமை நாள்வரை) தங்கவைக்கப்பதற்காகக் கொண்டுசெல்லுங்கள்” என்று கூறுவான்.

(ஓர் இறைமறுப்பாளர் உயிர் பிரியும்போது – அந்த உயிரிலிருந்து துர்வாடை கிளம்புவது பற்றியும் வானிலுள்ளோர் அதைச் சபிப்பார்கள் என்பது பற்றியும் புதைல் (ரஹ்) தெரிவித்ததாக ஹம்மாத் (ரஹ்) கூறுகின்றார்)

வானுலகவாசிகள், “ஒரு தீய ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது” என்று கூறுகின்றனர். அப்போது “இதை இறுதித் தவணைவரை கொண்டு செல்லுங்கள்” என்று கூறப்படுகிறது.

இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுகையில், தம்மிடமிருந்த மென்மையான துணியைத் தமது மூக்குவரை ‘இப்படி’க் கொண்டுசென்றார்கள் என்றும் அபூஹுரைரா (ரலி) (சைகை செய்து) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: