حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ حَدَّثَنِي مُوسَى بْنُ عُلَىٍّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ الْمُسْتَوْرِدُ الْقُرَشِيُّ عِنْدَ عَمْرِو بْنِ الْعَاصِ :
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “ تَقُومُ السَّاعَةُ وَالرُّومُ أَكْثَرُ النَّاسِ ” . فَقَالَ لَهُ عَمْرٌو أَبْصِرْ مَا تَقُولُ . قَالَ أَقُولُ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَئِنْ قُلْتَ ذَلِكَ إِنَّ فِيهِمْ لَخِصَالاً أَرْبَعًا إِنَّهُمْ لأَحْلَمُ النَّاسِ عِنْدَ فِتْنَةٍ وَأَسْرَعُهُمْ إِفَاقَةً بَعْدَ مُصِيبَةٍ وَأَوْشَكُهُمْ كَرَّةً بَعْدَ فَرَّةٍ وَخَيْرُهُمْ لِمِسْكِينٍ وَيَتِيمٍ وَضَعِيفٍ وَخَامِسَةٌ حَسَنَةٌ جَمِيلَةٌ وَأَمْنَعُهُمْ مِنْ ظُلْمِ الْمُلُوكِ
முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் அல்குறஷீ (ரலி), அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுகமுடிவு ஏற்படும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். அப்போது அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), “நீர் சொல்வதை நன்றாகச் சிந்தித்துச் சொல்வீராக!” என்று கூறினார்கள். அதற்கு முஸ்தவ்ரித் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதையே நான் சொல்கின்றேன்” என்றார்கள்.
அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), “நீர் இவ்வாறு கூறுவீராயின் அவர்களிடையே நான்கு குணங்கள் இருக்கும் (என்பதையும்) அறிந்துகொள்க:
- அவர்கள் சோதனையின்போது மக்களிலேயே மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பர்.
- சோதனைக்குப் பின்னர் மிக விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புவர்.
- (களத்திலிருந்து) வெருண்டோடிய பின்னர் மிக விரைவாகத் திரும்பி வருபவர்கள்.
- ஏழைகள், அநாதைகள், நலிந்தோர் ஆகியோருக்கு நல்லுதவிகள் புரிபவர்கள். ஜந்தாவதாக அவர்களிடம் அழகிய குணம் ஒன்று உண்டு. ஆட்சியாளர்களின் அநீதியிலிருந்து (மக்களைக்) காப்பவர்கள்.
அறிவிப்பாளர் : அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) வழியாக உலைய்யு பின் ரபாஹ் (ரஹ்)